பெங்களூர் அணிக்கு முன்னாள் இந்த அணி தான் என்னை கைப்பற்ற நினைத்தார்கள் ; விராட்கோலி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ;

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நான் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே கூறினார். அது இந்திய அணியில் மட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளிலும் அதே முடிவு தான் எடுத்துள்ளதாக விராட்கோலி அறிவித்தார்.

விராட்கோலியை அடுத்த இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோகித் சாரம் தான் இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் யார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்த போகிறார்கள் என்ற கேள்வி எழுகின்றன. ஆமாம். ! இந்த ஆண்டு 15ஆம் சீசன் வருகின்ற மார்ச் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது.

அதற்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதற்கிடையில், சமீபத்தில் விராட்கோலி அளித்த பேட்டியில் ஐபிஎல் அணியை பற்றி சில முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். அதில் ” 2008ஆம் ஆண்டு அண்டர்19 உலகக்கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வந்தது. அப்பொழுது தான் ஐபிஎல் போட்டிககள் இந்தியாவில் அறிமுகம் ஆனது.

அப்பொழுது எனக்குள் பெரிய கேள்வி ” இந்திய அணியில் விளையாடாத நான் எந்த விலைக்கு என்ன கைப்பற்றுவார்கள் என்று. ஆனால் என்னை கைப்பற்றிய விலையை பார்த்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமின்றி, என்னை டெல்லி அணி கைப்பற்ற நினைத்ததாக தகவல் வெளியானது. பின்னர் எனக்கு பதிலாக பிரதீப் சங்வான் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கினார்.

அந்த நேரத்தில் அவர் தான் நம்பர் 1 பவுலர். அதனால் டெல்லி அணியை அவரை கைப்பற்றி பவுலிங்கை வலுப்படுத்தியது. அந்த நேரத்தில் பெங்களூர் அணி என்னை கைப்பற்றிய பிறகு என்னுடைய வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் போல தான் நான் உணர்ந்தேன். அதனை இப்பொழுது நினைத்து பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் விராட்கோலி.

வருகின்ற 6ஆம் தேதி முதல் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் களமிறங்க உள்ளனர். அதனால் இப்பொழுது இந்திய அணி திவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.