அவர் சொல்ற மாதிரி தான் ஒரு வீரரை உருவாக்க முடியாது ; என்ன வேணாலும் பேசலாம், ஆனால் அது நடக்குமா ? மறைமுகமாக பேசிய கவுதம் கம்பிர் ;

0

வருகின்ற 6ஆம் தேதி முதல் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர். அதில் மூன்று ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் விளையாட உள்ளனர்.

சமீபத்தில் தான் 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. சில தினங்களுக்கு முன்பு பேசிய இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பேசியதில் ; இனிவரும் காலங்களில் இந்திய அணியின் வீரர்களை வடிவமைக்க வேண்டும் என்று கூறிருந்தார்.

இதற்கு மறைமுகமாக பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் ; இப்பொழுது நாம் பேசுவது கபில் தேவ் ரவுண்டர் கிடைப்பாரா இல்லையா என்பதை பற்றித்தான். ஆனால் அது சாத்தியமில்லை. அதனால் ரஞ்சி கோப்பையில் விளையாடும் வீரர்களை சரியாக பயன்படுத்தி அவர்களை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது என்றால் அந்த விஷயத்தில் தலை விட கூடாது. என்ன இருக்கிறதோ அதனை ஒப்புக்கொண்டு முன்னேறி போய்க்கொண்டே இருக்க வேண்டும். சர்வதேச போட்டியில் ஒரு வீரரை இப்படி விளையாடு அப்படி விளையாடு என்று சொல்லவே முடியாது.

அதனால் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் விளையாடு மற்றும் இந்திய அணியின் ஏ பிரிவில் விளையாடும் போது வீரர்களை எப்படிவேண்டுமானாலும் வடிவமைக்கலாம். ஆனால் இந்திய அணியில் இடம்பெற பிறகு விளையாட்டை மட்டும் தான் யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான (ஒருநாள்) இந்திய அணியின் விவரம் ;

ரோஹித் சர்மா, விராட்கோலி, கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தீபக் சஹார், ஷர்டுல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷோனி , முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா மற்றும் அவேஷ் கான்.

டி-20 போட்டிக்கான அணியின் விவரம் :

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல்,இஷான் கிஷான், விராட்கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், வெங்கடேஷ் ஐயர், தீபக் சஹார், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ்,புவனேஷ்வர் குமார், அவேஷ் கான் , ஹர்ஷல் பட்டேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here