ஓய்வு அறிவிக்கும் போது தோனி என்னிடம் இதை தான் சொன்னார் ; சிஎஸ்கே பவுலர் ஓபன் டாக் ;

ஐபிஎல் டி20 2022 போட்டியில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த முறை மெகா ஏலத்தை நடந்த முடிவு செய்தது பிசிசிஐ. கடந்த வாரம் இரு நாட்களில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஐபிஎல் டி20 போட்டி என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் அனைவரின் மனதிலும் இருக்கும். ஆமாம்..! கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டி தொடங்கியது. அதில் இருந்து இப்பொழுது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக மகேந்திர சிங் தோனி வழிநடத்தி வருகிறார்.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விலகியுள்ளார். இந்த முறை மெகா ஏலம் என்பதால் நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி கொடுத்தது.

அதில் ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்தது சென்னை. இருப்பினும் ஐபிஎல் ஏலத்தில் 14 கோடி, அதாவது அதிகபட்சமாக விலை கொடுத்து தீபக் சஹாரை பல போராட்டங்களுக்கு பிறகு கைப்பற்றியது சென்னை.

சமீபத்தில் சிஎஸ்கே அணியின் பவுலரான தீபக் சஹார் பேசியதில் தோனியை பற்றி பற்றி சில முக்கியமான தகவல் பகிர்ந்துள்ளார். அதில் ” ஒருநாள் தோனி என்னிடம் சொன்னார், நான் பவுலிங் சிறப்பாக பவுலிங் செய்கிறேன். ஆனால் பேட்டிங் பெரிய அளவில் இல்லை என்று. அதனை நீ செய்ய வேண்டும் என்று தோனி ஓய்வை அறிவிக்கும்போது என்னிடம் கூறினார்.

அந்த நாள் நானும் தோனியும் உட்கார்ந்து பல விஷயங்களை பற்றி பேசினோம். அதேபோல தோனி என்னை பேட்டிங் செய்வதில் கவனம் செலுத்த சொன்னார் என்று கூறினார் தீபக். மேலும் பேட்டிங் பற்றி பேசிய சஹார் ; நான் முதலில் இருந்து ஒரு ஆல் ரவுண்டராக விளையாட ஆசைப்பட்டேன். 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நான் பேட்டிங் செய்வதற்கு தான் ரொம்ப ஆசைப்பட்டேன்.

நான் எப்பொழுது பவுலிங் செய்வதை விட பேட்டிங் செய்வதற்கு தான் நான் அதிக ஆசைப்படுவேன். ஏனென்றால் பவுலிங் செய்தா சில ஓவர் மட்டுமே கிடைக்கும். ஆனால் பேட்டிங் அப்படி இல்லை. நான் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் நான் ரைசிங் புனே சூப்பர் ஜென்ட்ஸ் அணியில் விளையாடி வந்தேன். அதில் நான் பவுலிங் செய்வதை விட பேட்டிங் செய்வதை தான் அதிகமாக ஆர்வம் காட்டினேன்.

அதன்பின்னர், நான் சர்வதேச போட்டிகளில் விளையாடிய தொடங்கிய பிறகு, எனக்கு பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவானது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நான் அரைசதம் அடித்தேன். அதில் 25 பந்துகளை அடிக்க பெரிய அளவில் ஷாட்ஸ் அடிக்கவில்லை.

ஆனால் அதற்கு முன்னாள் நான் எதுவும் பேட்டிங் செய்யவில்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதால் பேட்டிங் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை என்று கூறியுள்ளார் தீபக் சஹார்.