இவர் இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமின்றி எந்த அணியிலும் இவரால் விளையாட முடியும் ; இந்திய வீரரை புகழ்ந்து பேசினார் கவாஸ்கர் ;

சமிபத்தில் தான் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகள் நடைபெற்றது. அதில், வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்தது இந்திய கிரிக்கெட் அணி.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலராக விளையாடி வருகிறார் பும்ரா. அதுமட்டுமின்றி விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு பும்ரா சிறந்த கேப்டனாக இருக்க வாய்ப்புள்ளதாக பலர் அவரவர் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பவுலராக வளம் வருகிறார்.

அதனால் நிச்சியமாக கேப்டனாக கூட உருமாற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கிடையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார் கவாஸ்கர். அதில் ” தீபக் சஹார் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை ஏனென்றால் அவர் ஒரு சிறப்பான ஸ்விங் பவுலர். அவர் அதனை வெளிப்படுத்தவில்லை என்றாலும் அவரது பவுலிங் அதனை வெளிப்படுத்தும்.

தீபக் சஹார் இன் ஸ்விங் மற்றுமின்றி அவுட் ஸ்விங் போன்ற இரண்டு விசயங்களையும் செய்ய முடியும். இப்படி செய்யும்போது நிச்சியமாக அதனை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களுக்கு நிச்சியமாக அது ஆபத்தாக தான் இருக்கும். அதுமட்டுமின்றி பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற இரு வீரர்கள் இருந்தாலே போதுமான ஒன்று .

அதுமட்டுமின்றி இன்னும் இந்திய அணியில் பும்ரா உள்ளார். அதனை யாரும் மறக்க முடியாது. பும்ரா நினைத்தால் எந்த அணியில் வேண்டுமானலும் இணைந்து விளையாட முடியும். அது போக முகமது சிராஜ், முகமது ஷமி போன்ற திறமையான பவுலர்கள் உள்ளனர். ஆமாம்..!! அதனால் இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் பற்றி யாரும் குறை சொல்லவே முடியாது என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

வருகின்ற 24ஆம் தேதி முதல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது இந்திய அணி. அதில் பும்ரா இடம்பெற்றுள்ளார். அதில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த முறை இந்தியாவுக்கு பதிலாக இலங்கையில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் அவ்வப்போது இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பை பெற்று வருகின்றனர். அதேபோல, தீபக் சஹார், சிராஜ், அவேஷ் கான் போன்ற வீரர்கள் சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் தான் இந்திய சிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார்.