இதற்கு யார் என்ன பண்ண முடியும் ; ஆனால் இதில் இருந்து ஒன்று நன்கு புரிந்தது ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

0

அரையிறுதி போட்டி : இன்று மதியம் தொடங்கிய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தனர்.

போட்டியின் விவரம் :

வழக்கம் போல் இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் சொதப்பியதால் முதல் 10 முழுவதும் நிதானமாக விளையாடியது இந்திய. ஆனால், அடுத்த 10 ஓவரில் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் பார்ட்னெர்ஷிப் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 168 ரன்களை அடித்துள்ளனர். அதில் கே.எல்.ராகுல் 5, ரோஹித் சர்மா 27, விராட்கோலி 50, சூர்யகுமார் யாதவ் 14, ஹர்டிக் பாண்டிய 63 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி.

இந்திய அணிக்கு எதிர்மாறாக நடந்துள்ளது. ஆமாம், இந்திய அணிக்கு தொடக்க ஆட்டமா அமையவில்லை. ஆனால் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரின் வெற்றிகரமான பார்ட்னெர்ஷிப் இங்கிலாந்து அணியை வெற்றிபெற வைத்துள்ளனர். ஒரு விக்கெட்டை கூட இழக்காத இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றுள்ளனர். இதில் ஜோஸ் பட்லர் 80 மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களை அடித்துள்ளனர்.

வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதி சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதை பற்றி பேசியுள்ளார் ரோஹித் சர்மா.

அதில் “கண்டிப்பாக வருத்தம் தான், இன்றைய தினம் எங்களுக்கு எதிராக மாறியுள்ளது. நாங்க இறுதி நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை அடித்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பவுலிங் செய்யவில்லை. அதுமட்டுமின்றி, இதுபோன்ற அரையிறுதி போட்டியில் அழுத்தத்தை எப்படி கையாளவேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதனை நிச்சியமாக இந்தமுறை அனைத்து இளம் வீரர்களும் கற்றுக்கொள்வார்கள்.”

“பவுலிங் செய்யும்போது தொடக்கத்தில் பதற்றமாக தான் இருந்தது. ஆனால் நிச்சியமாக பாராட்டுக்கள் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களுக்கு தான் சேரும். முதல் ஓவரில் ஸ்விங் ஏற்பட்டது, ஆனால் சரியான இடத்தில் ஸ்விங் ஆகவில்லை. முதல் போட்டியில் வென்ற போது இந்திய வீரர்களை பற்றி தெரிந்தது. அதேபோல பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெல்வது சிரமமாக தான் இருந்தது. அதனால் 9 ஓவரில் 85 ரன்களை அடிப்பது சிரமமாக இருக்கும் என்று நினைத்தேன். எப்பொழுதும் நாம் நினைத்த பிளான் சரியாக நடக்கவில்லை என்றால் அந்த இடத்தில் பிரச்சனை தான் ஏற்படும் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here