ஹர்டிக் பாண்டியாவை சமாளிக்க தான் இப்படி செய்தேன் ; ஆனால் …! ; ஜோஸ் பட்லர் ஓபன் டாக் ;

செமி பைனல் : Adelaide மைதானத்தில் தொடங்கியது அரையிறுதி போட்டி. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வழக்கம் போல் தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. கே.எல்.ராகுல் விக்கெட்டை இழந்த நிலையில் விராட்கோலி மற்றும் ரோஹித் ஷர்மா சேர்ந்து சிறப்பாக விளையாட வந்தனர். ஆனால் ஜோர்டான் பந்து வீச்சில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இருந்தாலும் விராட் மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன. இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 168 ரன்களை அடித்தது. அதில் அதிகபட்சமாக விராட்கோலி 50. ஹர்டிக் பாண்டிய 63 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. எப்படியாவது விக்கெட்டை கைப்பற்ற வேண்டுமென்று அனைத்து விதமான முயற்சிகளை ரோஹித் சர்மா எடுத்தார். ஆனால் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தவித்தது இந்திய. அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர் முடிவில் 170 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய அணி :

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியமால் தவித்தது இந்திய. அதேபோல தான் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை போட்டியிலும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் சூப்பர் 4 லீக் சுற்றில் இருந்து வெளியேறியது இந்திய. அதனை அடுத்த இப்பொழுதும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வி பெற்று அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது இந்தியா….! அப்போ இந்திய அணியில் சரியான வீரர்கள் இல்லையா ?

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டி :

போட்டி முடிந்த பிறகு பேசிய ஜோஸ் பட்லர், இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார். அதில் ” அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற்றது எங்களுக்கு பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது. அதில் இருந்து தான் எங்களுடைய உண்மையான விளையாட்டு வெளியாகியுள்ளது. அதனை அடுத்து நாங்க இந்த இடத்தில் நிற்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் அணியில் இருக்கும் முதல் வீரரில் இருந்து இறுதி ஆக இருக்கும் வீரர் வரை அனைவரும் சிறப்பாக விளையாடியுள்ளனர். என்னுடன் பார்ட்னெர்ஷிப் செய்த ஹேல்ஸ் சிறப்பாக விளையாடி அவருடைய போரம் என்பதை வெளிக்காட்டியுள்ளார்.”

“இன்றைய போட்டியில் வென்றாலும், குறிப்பாக நான் ஜோர்டான் -க்கு தான் புகழை சமர்ப்பணம் செய்ய ஆசைப்படுகிறேன். ஏனென்றால் முக்கியமான மூன்று ஓவரில் பவுலிங் செய்து ரன்களை கட்டுப்படுத்தினார். இறுதிவரை போட்டியின் அழுத்தத்தை சரியாக சமாளித்துள்ளார் ஜோர்டான். அதிலும் குறிப்பாக ஹர்டிக் பாண்டிய அதிரடியாக விளையாடி கொண்டு இருந்தார். அப்பொழுது ஜோர்டான் செய்த பவுலிங் மிகவும் அருமையாக இருந்தது என்று கூறியுள்ளார் ஜோஸ் பட்லர்.”

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்ன ?? ஐசிசி , ஆசிய போன்ற போட்டிகளில் ஏன் ? இந்திய அணியால் வெல்ல முடிவதில்லை ?