பும்ரா, ஷமி -க்கு பிறகு இவர் நிச்சியமாக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் உறுதியாக இடம்பேறுவார் ; இவர் முக்கியமான வீரராக மாறிவிட்டார் ; ஆசிஷ் நெஹ்ரா ஓபன் டாக் ;

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் டீன் எல்கர் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மூன்று டெஸ்ட் தொடர் போட்டியில் விளையாட உள்ளனர். வருகின்ற 26ஆம் தேதி அன்று முதல் டெஸ்ட் போட்டி தென்னாபிரிக்காவில் உள்ள சென்டோரினில் நடைபெற உள்ளது.

சமீபத்தில் தான் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் கேப்டன் தலைமையிலான இந்திய அணியில் விராட்கோலி, கே.எல்.ராகுல், பிரியங்க் பஞ்சால், மயங்க் அகர்வால், புராஜா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், விஹாரி, ரிஷாப் பண்ட், சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா , ஷர்டுல் தாகூர் மற்றும் முகமது சிராஜ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆசிஷ் நெஹ்ரா அளித்த பேட்டியில் சில்க் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியை பற்றி கூறுகையில் ; இந்திய அணி எங்கு விளையாடினாலும் பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவரும் உறுதி தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவர்களை தொடர்ந்து முகமது சிராஜ் மூன்றாவது பவுலராக இந்திய அணிக்கு உறுதியான வீரராக மாறியுள்ளார் என்பது தான் உண்மை. கடந்த மாதத்தில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இஷாந்த் ஷர்மாவுக்கு அடிபட்ட காரணத்தால் முகமது சிராஜ் இடம்பெற்றார். அப்பொழுது அவர் மிகவும் சிறப்பான பவுலிங் செய்துள்ளார்.

இதை விட நல்ல விஷயம் என்னவென்றால் இந்திய கிரிக்கெட் அணியில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். உதாரணத்திற்கு உமேஷ் யாதவ், இதுவரை பல டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை விளையாடியுள்ளார் என்பது தான் உண்மை. அவரை தொடர்ந்து இப்பொழுது ஷர்டுல் தாகூர் அணியில் இடம்பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார் ஆசிஷ் நெஹ்ரா.

இந்திய அணிக்கு சவாலாக தான் இருக்க போகிறது தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஏனென்றால், இதுவரை முதல் டெஸ்ட் போட்டி நடைபெற போகின்ற மைதானத்தில் தென்னாபிரிக்கா அணி தான் அதிக வெற்றிகளை கைப்பற்றியுள்ளது. அதனால் இந்திய அணிக்கு புதிய சூழல் என்பதால் வெற்றியை கைப்பற்ற சற்று கடினமாக கூட இருக்கலாம்..!! என்ன செய்ய போகிறது இந்திய அணி?? தொடரை கைப்பற்றுமா ??என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!!