தோனியின் சாதனையை முறியடிக்க போகிறார் தோனியின் “ஜெராக்ஸ்”. அப்படி என்ன சாதனை ? யார் செய்ய போகிறார் ? முழு விவரம் இதோ ;

0
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான கேப்டன் மட்டுமின்றி இந்திய அணியின் சொத்து என்று கூட சொல்லலாம் அவர் தான் மகேந்திர சிங் தோனியை. தோனி தலைமையிலான இந்திய அணி மட்டும் தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2020யில் இந்திய அணியின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால் மகேந்திர சிங் தோனி இன்னும் ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டியில் ஏலம் நடைபெற உள்ளது.

40வயதான தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கைப்பற்றியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் மகேந்திர சிங் தோனி அதிரடி பினிஷார் ஆக இருந்துள்ளார், அதுமட்டுமின்றி பல சாதனைகளை செய்துள்ளனர். அவரை பின்பற்றி ரிஷாப் பண்ட் இப்பொழுது விளையாடி வருகிறார்.

டெஸ்ட் போட்டியில் தோனி 100 விக்கெட்டை கைப்பற்ற 36 போட்டிகள் எடுத்துள்ளார். சஹா 37 போட்டிகளிலும், கிரண் மோர் 39 போட்டிகளில், நயன் மோங்கிய 41 போட்டிகளில் தான் 100 விக்கெட்டை விக்கெட் கீப்பராக கைப்பற்றியுள்ளனர். ஆனால் ரிஷாப் பண்ட் இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 97 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இன்னும் மூன்று விக்கெட் மட்டுமே மிதமுள்ளது.

வருகின்ற 26ஆம் தேதி முதல் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் மட்டும் ரிஷாப் பண்ட் 3 விக்கெட்டை கைப்பற்றினால் முதல் இந்திய வீரராக அதுவும் 26 போட்டிகளில் 100 விக்கெட்டை பிடித்த முதல் வீரராக இருப்பார். கடந்த சில ஆண்டுகளாக ரிஷாப் பண்ட் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் அசத்தலாக விளையாடி வருகிறார்.

சாதனையை முறியடிப்பாரா இல்லையா ?? என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும். சமீபத்தில் தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தென்னாபிரிக்கா சென்றுள்ளனர். இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, முதல் டெஸ்ட் போட்டி சென்டோரின் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அந்த மைதானத்தில் இதுவரை அதிகபட்சமாக தென்னாபிரிக்கா அணி தான் வென்றுள்ளனர். அதனால் இந்திய அணிக்கு நிச்சியமாக சவாலாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here