தோனி சொன்னதால் தான் என்னை CSK அணியில் எடுத்துள்ளனர் ; CSK பேட்ஸ்மேன் ஓபன் டாக் ;

ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமின்றி இதுவரை மொத்தம் 18 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு இறுதியில் (லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ்) போன்ற இரு புதிய அணியை அறிமுகம் செய்தது பிசிசிஐ.

கடந்த ஆண்டு சாம்பியன் படத்தை வென்றுள்ளது சென்னை. சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக சிஎஸ்கே அணியில் அறிமுகமாகி அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியது. இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. அதில் ராபின் உத்தப்பாவை இரண்டு கோடி கொடுத்து சென்னை அணி கைப்பற்றியுள்ளது.

இதனை பற்றி பேசிய சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா கூறுகையில் ; “என்னை (ராபின் உத்தப்பா) அணியில் கைப்பற்றிய பிறகு தோனி என்னை தொடர்பு கொண்டார்.அப்பொழுது நான் தோனியிடம் என்மேல் நம்பிக்கை வைத்ததற்கு மிகவும் நன்றி என்று சொன்னேன்.”

இல்லை இல்லை நீங்க அணியில் இடம்பெற்றதிற்கு நான் (தோனி ) காரணம் இல்லை. அதில் இரு விஷயங்கள் உள்ளது. 1. நீங்க (ராபின்) உங்க திறமையை வைத்து அணியில் இடம்பெற வேண்டும், அதுதான் நடந்துள்ளது. 2. ஒருவேளை நான் உங்களை அணியில் எடுக்க வேண்டும் என்று சொல்லிருந்தால், நீங்க என்னுடைய நண்பர் அதனால் தான் அணியில் எடுத்துள்ளனர் என்று சொல்வார்கள்.”

அதனால் தான் நான் எந்த முடிவையும் கையில் எடுக்கவில்லை என்று ராபின் உத்தப்பாவிடம் தோனி கூறியுள்ளதாக சொன்னார் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.” ராபின் உத்தப்பா கடந்த ஆண்டு இறுதியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை விளாசினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் டேவன் கான்வே சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் இரண்டாவது போட்டியில் இருந்து சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார் உத்தப்பா. ஆனால் ராபின் உத்தப்பா இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 104 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

கடந்த இரு போட்டிகளில் தொடக்க வீரர்களான ருதுராஜ் மற்றும் ராபின் உத்தப்பாவின் பார்ட்னெர்ஷிப் சரியாக இல்லை. பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் ஆட்டத்தை இழந்து வருகின்றனர். என்ன செய்ய போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?

தொடக்க வீரர்களில் ஏதாவது மாற்றம் செய்ய போகிறதா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?? சென்னை ரசிகர்களே நீங்க சொல்லுங்க என்ன செய்தால் சென்னை அணிக்கு வெற்றியின் வாய்ப்பு அதிகரிக்கும் ? என்று மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்.