தவறு செய்கிறாரா ஜடேஜா ? கேப்டனான பிறகும் ரவீந்திர ஜடேஜா இப்படி செய்வது சரியா ? ரசிகர்கள் அதிருப்தி

0

ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் தொடங்கியது. அதுமட்டுமின்றி, இந்த முறை இரு (லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ்)போன்ற அணிகள் அறிமுகம் ஆனது. அதனால் மொத்தம் 10 அணிகள் என்பதால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அணி என்றால் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தான். இதுவரை 14 சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும் சாம்பியன் படத்தை வென்றுள்ளது.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் சென்னை அணி இந்த ஆண்டு 2022 போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை. இதுவரை விளையாடி நான்கு போட்டிகளிலும் தோல்வியை பெற்று புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது சென்னை அணி.

இதற்கு என்ன தான் காரணமாக இருக்கும் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சில போட்டிகளில் 200க்கு மேற்பட்ட ரன்களை அடித்தும் தோல்வியை பெற்றுள்ளது சென்னை. அப்படி என்றால் பவுலிங் தான் மோசமான நிலையில் உள்ளதா என்று பல கேள்விகள் எழுந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு வரை சென்னை அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாகவும் எனக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா கேப்டனாக இருப்பார் என்றும் தோனி அறிவித்தார்.

ஜடேஜா ஒரு ஆல் – ரவுண்டர், அவரது சுழல் பந்து வீச்சு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரவீந்திர ஜடேஜா வழக்கம் போல தான் விளையாடுகிறாரா என்று கேட்டால் அது சந்தேகம் தான்.

அதுமட்டுமின்றி, நேற்று சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அதில் சென்னை அணியை 8 விக்கெட்டை வித்தியாசத்தில் வென்றதுள்ளது. இந்த போட்டிக்கும் நடக்கும்போது ஜடேஜா அவ்வப்போது மகேந்திர சிங் தோனியை பார்த்து என்ன செய்வது என்று சைகை காட்டியதை பார்க்கமுடிந்தது.

சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரவீந்திர ஜடேஜா அவருக்கு தோன்றிய படி அணியை வழிநடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்பொழுது புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது..!!!!!!!

அதற்கு என்ன காரணமாக இருக்கும் ?? கிரிக்கெட் ரசிகர்களே உங்கள் சரியான கருத்துக்களை மறக்காமல் COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here