மீண்டும் பழைய தவறை செய்யும் CSK ; மறுபடியும் இப்படி வீரர்களை தேர்வு செய்தால் என்ன செய்வது ; சிஎஸ்கே ரசிகர்கள் ஆவேசம்;

0

ஐபிஎல் 2022 மெகா ஏலம் இன்று மதியம் 12 மணியளவில் இருந்து தொடங்கியது. இந்த முறை இரு புதிய நிங்களை பிசிசிஐ செய்துள்ளதால் ஏலம் நடைபெற்று வருகிறது.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் யார் யார் எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்று பல குழப்பங்கள் எழுந்தன. அதற்கு இன்னும் ஒரு நாட்களில் விடை கிடைத்துவிடும். இதுவரை 25 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். அதில் சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித், ஷாகிப் ஆல் ஹசன் போன்ற வீரர்கள் எந்த அணியிலும் இடம்பெறாதது அதிர்ச்சியாக தான் உள்ளது.

ஐபிஎல் 2022 ஏலத்தில் மற்ற அணிகளை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்று ரசிகர்கள் இடையே ஆர்வம் எழுந்தது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்றைய ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருகிறது.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ராபின் உத்தப்பாவை கைப்பற்றியது. அதே நேரத்தில் வேறு எந்த அணியில் ராபின் உத்தப்பாவை கைப்பற்ற முன்வரவில்லை. அதனால் 2 கோடிக்கு ராபின் உத்தப்பா மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றார். பின்னர், ஆல் -ரவுண்டரான பிராவோ மீண்டும் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளார்.

ப்ராவோ பெயரை கேட்டவுடன் கையை உயர்த்தியது சிஎஸ்கே,பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் டேலி கேபிட்டல்ஸ் அணிகள் போட்டியிட்டது. அதன்பின்னர் இறுதியாக 4.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ராவோவை கைப்பற்றியது அதிர்ச்சியாக இருந்தது.

ஆமாம்..! பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் வீரர்கள் வயதான வீரர்கள் என்று பல விமர்சம் எழுந்துள்ளது. இந்த முறை அப்படி இருக்காது என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதிஷ் ரான , ஷிகர் தவான், ஜேசன் ஹோல்டர், ஹர்ஷல் பட்டேல் , தீபக் ஹூடா போன்ற வீரர்களை கைப்பற்ற முன்வந்தது.

ஆனால் மற்ற அணிகள் போட்டிபோட்டுக்கொண்டு வந்ததால் அவர்களை கைப்பற்றவில்லை. இந்த முறை ஆவது பல இளம் வீரர்களை சிஎஸ்கே அணி கைப்பற்றுமா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். ப்ராவோ மற்றும் ராபின் உத்தப்பா அணியில் இடம்பெற்றது சரியாக இருக்குமா ?

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள Comments பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here