நம்ம சுரேஷ் ரைனாவுக்கு இந்த நிலைமை ஆ ? ஏலத்தில் நடந்த மோசமான நிகழ்வு..! அதுவும் சின்ன தல ரெய்னாவுக்கு ..! முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2022 மெகா ஏலம் : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிக்கான மெகா ஏலம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

ஐபிஎல் 2008ஆம் ஆண்டு அதாவது ஐபிஎல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்பொழுது கடந்த ஆனது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வந்துள்ளார் சின்ன தல சுரேஷ் ரெய்னா. ஆனால் கடந்த ஆண்டு இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

அதில் சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் சொல்லும் அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆமாம்..! பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்து கொண்டு வந்தார் சுரேஷ் ரெய்னா. பின்னர் முதுகில் காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா அணியில் இடம்பெற்றார்.

முதலில் சில போட்டிகளில் சரியாக விளையாடாத உத்தப்பா, ப்ளே – ஆஃப் போட்டிகளில் அருமையாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் சுரேஷ் ரெய்னாவின் தேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேவை படாமல் போனது. பின்னர் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறிய பிறகு கூட சுரேஷ் ரெய்னாவை யோசிக்கவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, மகேந்திர சிங் தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் மட்டுமே தக்கவைப்பட்டுள்ளனர். இதில் சுரேஷ் ரெய்னா இல்லாதது அதிர்ச்சியாக இருந்தது. சரி ஏலத்தில் நிச்சியமாக சுரேஷ் ரெய்னா இடம்பெறுவர் என்று பலர் நினைத்தனர்.

ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவின் அடிப்படையான விலை 2 கோடி. ஆனால் அதனை கூட கொடுத்து ஒரு அணியும் ரெய்னாவை அணியில் கைப்பற்ற முன்வரவில்லை. பல ஐபிஎல் போட்டிகளில் விளையாடி பல அனுபவம் வைத்துள்ள ரெய்னாவுக்கு இந்த நிலைமையா ? என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இருப்பினும் நாளை ஏலம் முடிந்த பிறகு ஏலத்தில் கைப்பற்ற படத்தை வீரர்களை மீண்டும் ஒரு முறை ஏலம் விடப்படும். அதில் ஆவது ஏதாவது ஐபிஎல் அணி சுரேஷ் ரெய்னாவை கைப்பற்றுமா இளைய என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..! சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயற்சி செய்யாதது உங்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!