எனக்கு இவர் அணியில் இருக்கும் வரை எந்த கவலையும் இல்லை ; கேப்டனான பிறகு ரவீந்திர ஜடேஜா நெகிழ்ச்சி பேட்டி ;

கடந்த 2008ஆம் முதல் இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். பின்னர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பிடித்த காரணத்தால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது ஐபிஎல் டி-20 போட்டிகள். இதுவரை மொத்தம் 14 சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

இதற்கிடையில் நாளை முதல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிகள் நாளை இரவு முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர்.

முதல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் சென்னை அணியில் ஒரு சோகமாக நிகழ்வு நடந்துள்ளது. ஆமாம், நம்ம கேப்டன் தல மகேந்திர சிங் தோனி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவரது பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துவிட்டார்.

இதனை பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஏனென்றால் இந்த ஆண்டு மட்டும் கேப்டனாக இருந்திருக்கலாம் என்று அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் ஜடேஜா சென்னை அணியில் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி, எப்பொழுதும் தோனியின் ஆதரவு அவருக்கு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் ; “கேப்டனாக பொறுப்பேற்றது சந்தோசமாக தான் உள்ளது. சென்னை அணியை முதல் இடத்தில் தக்கவைத்து அதனைஅருமையாக வழிநடத்தி வந்துள்ளார்.”

“அதனை நான் இப்பொழுது அணியை வழிநடத்த வேண்டும். நான் நிச்சியமாக ரொம்ப கவலைப்படமாட்டேன், ஏனென்றால் தோனி இருக்கிறார். எனக்கு எந்த கேள்விகள் எழுந்தாலும் அதனை அவரிடம் தான் நிச்சியமாக கேட்ட போகிறார். முன்னாடியும் சரி இப்பொழுது சரி அவர் என்னுடன் தான் இருக்கிறார்.”

“அதனால் நான் அதிகமாக கவலைப்பட வேண்டியது இல்லை. எனக்கு வாழ்த்துக்கள் சொன்ன அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி என்று கூறியுள்ளார் ரவீந்திர ஜடேஜா.” தோனியை விட்டுக்கொடுக்காமல் பேசினார் ஜடேஜா. தோனிக்கு பிறகு ரவீந்திர ஜடேஜா சென்னை அணியை சிறப்பாக வழிநடத்துவாரா இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே Comments பண்ணுங்க..!