மும்பை அணியின் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் இதுதான் ரோஹித் ஷர்மாவின் அதிரடி பேட்டி ; அதிர்ச்சியில் இருக்கும் மற்ற அணிகள் ;

0

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் நாளை இரவு முதல் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் மொத்தம் 10 அணிகள் இருப்பதால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர்.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு முதல் போட்டிக்காக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஐபிஎல் போட்டியில் அதிபட்சமாக ஐந்து முறை கோப்பையை வென்ற பெருமை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தான் .

ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியது மும்பை ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஏனென்றால் 2019 மற்றும் 2020 போன்ற இரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மும்பை, ஹாட்ரிக் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை எப்படி விளையாட போகிறது என்று பல கேள்விகள் எழுந்தன. சமீபத்தில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார்.

அதில் ” நான் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகிறேன். அதுமட்டுமின்றி இந்த முறையில் இருந்து நானும் இஷான் கிஷான் தான் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய போகிறோம் என்று கூறியுள்ளார். மேலும் இப்பொழுது சூரியகுமார் யாதவ் சில நேரங்கள் ஓய்வை எடுத்து வருகிறார்.”

“அதனால் இன்னும் சில நாட்களில் சூர்யகுமார் யாதவ் கூடிய விரைவில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விடுவார்.முதல் போட்டியில் அவர் விளையாடுவாரா இல்லையா என்று கேட்டால் அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் அவர் விரைவாக அணியில் இணைந்து விடுவார் அதில் மாற்றமில்லை என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

புதிய வீரர்களை பற்றி பேசிய ரோஹித் சர்மா :” மில்ஸ், உனட்கட் போன்ற வீரர்கள் புதிதாக அணியில் இணைந்துள்ளனர். ஆனால் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கு புதிதல்ல. பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவர்களிடம் உள்ளது. அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்கு தெரியும் .”

“அதுமட்டுமின்றி, இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு புதிய அணியாக தான் களமிறங்க போகிறது. ஏனென்றால் 80 சதவீத வீரர்கள் இதற்கு முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது இல்லை. அதனால் எந்த ஒரு பலனும் இப்பொழுது இருப்பது போல எனக்கு தெரியவில்லை.”

“ஆனால் கடந்த ஆண்டு நான் (ரோஹித் சர்மா), இஷான் கிஷான், சூர்யகுமார் மற்றும் பொல்லார்ட்) போன்ற வீரர்கள் மும்பை மைதானத்தில் விளையாடவில்லை. ஆனால் மற்ற வீரர்கள் விளையாடியுள்ளனர். இரு ஆண்டுகள் கழித்து இங்கு விளையாட போகிறோம், அதனால் எந்த ஒரு நன்மையும் இல்லை என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா”.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 லீக் போட்டியின் போது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு எதிராக விளையாடியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் போன்ற இருவரும் களமிறங்கினார்கள்.

அதில் ரோஹித் சர்மா 18 ரங்களில் ஆட்டம் இழந்தார். ஆனால் இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்து தொம்சம் செய்தார். வெறும் 32 பந்தில் 84 ரன்களை அடித்து விளாசியுள்ளார். அதனால் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்தால் நிச்சியமாக எதிர் அணிக்கு ஆபத்து தான் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here