ரிஷாப் பண்ட் மற்றும் அஸ்வினுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு.. !! என்ன நடந்தது…முழு விவரம் இதோ !!

ஐபிஎல் 2021, போட்டிகள் ஆரம்பித்து சில நாட்களே ஆன நிலையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். 13வது போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 137 ரன்களை அடித்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா 44 ரன்கள், டி- காக் 2 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 24 ரன்கள், இஷான் கிஷான் 26 ரன்கள் மற்றும் ஜெயந்த் யாதவ் 23 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அதனால் புள்ளிப்பட்டியளில் மும்பை இந்தியன்ஸ் அணி 4வது இடத்திலும் , டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2வது இடத்திலும் உள்ளது.

இந்த போட்டியில் டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் மற்றும் அதே அணியை சேர்ந்த அஸ்வினுக்கும் சில சலசலப்பு ஏற்பட்டது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி பவுலிங் செய்யும்போது இரண்டாவது ஓவர் வீசியுள்ளார் அஸ்வின். அந்த பந்தை எதிர்கொண்ட ரோஹித் சர்மா அதனை அடிக்க முயன்ற போது LBW ஆக இருக்கும் என்று டெல்லி அணியை சேர்ந்த அஸ்வின் மற்றும் ரிஷாப்ப் பண்ட் இருவரும் சத்தம் போட்டனர்.

ஆனால் நடுவர் அதனை அவுட் இல்லை என்று சொன்னதால் Review எடுக்கலாம் என்று அஸ்வின் ரிஷாப் பண்டிடம் கேட்டார், ஆனால் அவர் அதற்கு இல்லை வேண்டாம் என்ற மாதிரி கூறியதால் அஸ்வின் முகம் சுழித்து கொண்டார். அதன் வீடியோ இப்பொழுது சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ;;