இவருக்கு ஒருநாள் போட்டியில் விளையாடும் அளவிற்கு அனுபவம் இல்லை ; புதிய வீரரை விளாசிய கம்பிர்;

0

இன்னும் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டிகள் பற்றி பேச்சு தினம்தோறும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. ஆமாம் கடந்த டிசம்பர் 2021 இறுதி தொடங்கியது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிகள்.

அதில் மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடிய வெறும் 1 போட்டியில் மட்டுமே இந்திய அணி வென்றது. பின்னர் ஒருநாள் போட்டியில் அதுவும் இல்லை. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி விளையாடிய மூன்று ஒருநாள் போட்டியிலும் தோல்வியை பெற்றுள்ளது. அதனால் 3 – 0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்திய அணியில் இந்த முறை ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இரு புதிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. ஆனால் வெங்கடேஷ் ஐயருக்கு முதல் இரு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதில் ஒரு பயனும் இல்லை. ஆமாம் முதல் ஒருநாள் போட்டியில் 2 மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ரன்களை அடித்துள்ளார். இதனால் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு பயனும் இல்லை. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் ” எனக்கு தெரிந்து வெங்கடேஷ் ஐயரை டி-20 போட்டிகளில் மட்டும் தான் உபயோகப்படுத்த வேண்டும். ஏனென்றால் ஒருநாள் போட்டியில் விளையாடும் அளவிற்கு வெங்கடேஷ் ஐயருக்கு அனுபவம் இல்லை. வெங்கடேஷ் ஐயரை 7 ,8 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதை வைத்து சர்வதேச போட்டியில் அவரை அறிமுகம் செய்துள்ளனர்.

ஐபிஎல் போட்டியை வைத்து அவரை (வெங்கடேஷ் ஐயர்) தேர்வு செய்தால் அப்பொழுது டி-20 போட்டிகளில் தான் அவரை விளையாட வைக்க முடியும். ஏனென்றால் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு அதிக அளவில் வித்தியாசம் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் ஐயர் தொடக்க வீரராக களமிறங்கினார்.

ஆனால் இப்பொழுது மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து வருகிறார். அவரை மீண்டும் அதே இடத்திற்கு அனுப்புங்கள். ஒருவேளை வெங்கடேஷ் ஐயரை ஒருநாள் போட்டியில் அதுவும் மிடில் ஆர்டரில் தான் விளையாட வைப்பீர்கள் என்றால் அவரது ஐபிஎல் அணியிடம் சொல்லி அவரை மிடில் ஆர்டரில் விளையாட வையுங்கள்.

ஆனால் எனக்கு தெரிந்த வரை அவர் டி-20 போட்டிக்கு மட்டும் தான் சரியாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினால் தான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர். கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் கொல்கத்தா அணியில் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2022யிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வெங்கடேஷ் ஐயர் தக்கவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here