இவர் நிச்சியமாக 1000 விக்கெட்டை கைப்பற்றுவார் ; தமிழக வீரரை புகழ்ந்து பேசிய ஷேன் வோர்ன் ஓபன் டாக் ;

0

இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரான இவர் நிச்சியமாக 1000 விக்கெட்டை கைப்பற்றுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வோர்ன்.

சமீபத்தில் தான் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் மேட்டரும் ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தொடரை கைப்பற்ற முடியாமல் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எப்பொழுது ஒரு வீரரை பற்றி இன்னொரு வீரர் பேசுவது வழக்கம். அதேபோல தான் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரை பற்றி அவரது கருத்தை பதிவு செய்துள்ளார் ஷேன் வோர்ன். யார் அந்த வீரர் ? தெரியுமா???

டெஸ்ட் போட்டியில் இதுவரை ஷேன் வோர்ன் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகிய இருவரும் தான் அதிக விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். அதில் ஷேன் வோர்ன் 708 மற்றும் முரளிதரன் 800 விக்கெட்டை டெஸ்ட் போட்டியில் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களை அடுத்து இப்பொழுது போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்கும் வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 430 விக்கெட்டையும், நாதன் லியொன் 415 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். இதனை குறித்து கூறுகையில் ; எனக்கு தெரிந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மாற்று நாதன் லியொன் ஆகிய இருவரும் சாதனை படைப்பார்கள்.

ஏனென்றால் இப்பொழுது இருக்கும் சுழல் பந்து வீச்சாளர்களில் மிகவும் திறமையான வீரர்கள். வேகப்பந்து வீச்சாளர்கல் பவுலிங் செய்தால் பேட்ஸ்மேன்கள் அதனை சுலபமாக முடித்துவிடுவார்கள். ஆனால் ஒரு சுழல் பந்து வீச்சாளர் பவுலிங் செய்தால் அதனை கவனமாக பார்த்து எதிர்கொள்வார்கள்.

அதில் எனக்கு தெரிந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நாதன் லியொன் ஆகிய இருவரும் நிச்சியமாக 1000 விக்கெட்டை கைப்பற்றுவார்கள். அது அற்புதமான செயல், அதுமட்டுமின்றி இப்பொழுதெல்லாம் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஒரு வீரருக்கு பெருமையே மற்ற நாடுகளுக்கு சென்று அங்கு சிறப்பாக விளையாடுவது தான். அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

நான் அவருடைய (ரவிச்சந்திரன் அஸ்வின்) மிகப்பெரிய ரசிகன், ஏனென்றால் அவர் பவுலிங் செய்யும் விதம் அப்படி. அவர் எப்பொழுதும் விதவிதமாக பவுலிங் செய்து அசத்துவார் என்று கூறியுள்ளார் ஷேன் வோர்ன். சமீபத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் மொத்தமாக 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here