இவரால் தான் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு வந்ததற்கு முக்கியமான காரணம் ; முன்னாள் இந்திய அணியின் வீரர் கரீம் கூறியுள்ளார்..!

இவரால் தான் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு வந்ததற்கு முக்கியமான காரணம் ; முன்னாள் இந்திய அணியின் வீரர் கரீம் கூறியுள்ளார்..!

WTC 2021 போட்டி :

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதுவும் இந்த இறுதி போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் :

விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), சுப்மன் கில், ரோஹித் சர்மா, மயங்க அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷாப் பண்ட், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் பண்ட், முகம்மது ஷாமி, முகம்மது சிராஜ், தாகூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், சஹா, பிரஷித் கிருஷ்ணா மற்றும் அவேஷ் கான் போன்ற வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க போகின்றனர்.

இந்திய அணியின் சமீபத்திய வெற்றிகள் :

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் சீரியஸ் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன்பிறகு இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் சீரியஸ் 3-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இந்திய அணியின் தொடர்ந்து டெஸ்ட் சீரியஸ் போட்டிகளில் வெற்றி பெற்றதுக்கு இவர் தான் முக்கியமான கரணம் என்று முன்னாள் இந்திய அணியின் வீரர் கரீம் கூறியுள்ளார்…!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு வருகின்ற ஜூன் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ளது. அதற்கு முக்கியமான காரணம் ரிஷாப் பண்ட் தான்.இந்திய அணி இந்த நிலைமைக்கு ரிஷாப் பண்ட் தான் காரணம், அதனை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது.

ரிஷாப் பண்ட் செய்த பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் போன்ற முக்கியமான பங்களிப்பு காரணமாக தான் இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ரிஷாப் பண்ட் அணியில் இடம்பெற்றதால் மட்டுமே ஐந்து பவுலிங் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 274 ரன்களை அடித்துள்ளார். அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சீரியஸ் போட்டிகளில் 270 ரன்களை அடித்துள்ளார் ரிஷாப் பண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.