என்னை விடுங்க…! இந்திய அணி சாம்பியன் கோப்பை மற்றும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்லாததற்கு இதுதான் காரணம் ; சுரேஷ் ரெய்னா பேட்டி ;

0

நாளை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் நடைபெற உள்ளது.

சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அனைத்து போட்டியிலும் இந்திய அணி வென்றுள்ளது. அதுவும் 3 – 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ்அவுட் செய்துள்ளது. கிரிக்கெட் உலகில் அதிக பெருமை பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

இப்பொழுது தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றுள்ளார். அதனால் ரோஹித் சர்மா கேப்டனாகவும் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தும் சமீபத்தில் நடந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி லீக் போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ளது.

அதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். அதேபோல, இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா அளித்த பேட்டியில் ; 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன் கோப்பை மற்றும் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் தோல்வியை பெற்றதற்கு ஒரே காரணம்.

இந்திய அணியில் ஆறாவது பவுலிங் இல்லாதது தான் காரணம். ஆனால் இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இப்பொழுது அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடி வருகிறார். ஷ்ரேயாஸ் ஐயர் இப்பொழுது பவுலிங் செய்து வருகிறார். இன்னும் அவர் சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும் , அதற்கான பயிற்சியை மேற்கொண்டு வரவேண்டும்.

அதனால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பான அணியாக மாற அதிக வாய்ப்புள்ளது. சுரேஷ் ரெய்னா கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இருப்பினும் ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா. கடந்த ஆண்டு ஐபிஎல் டி20 லீக் போட்டியில் பெரிய அளவில் பேட்டிங் செய்யவில்லை.

அதனால் சென்னை அணி அவரை தக்கவைத்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, ஐபிஎல் ஏலத்தில் ஏதாவது அணியில் இடம்பெருவார் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆமாம்…!! முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் இடம்பெறமால் வெளியேற்றியுள்ளார் சுரேஷ் ரெய்னா. இது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here