8 முக்கியமான வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் கைப்பற்றபடவில்லை ; அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ ;

ஒருவழியாக ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான ஏலம் நேற்று இரவுடன் நடந்து முடிந்துள்ளது. இந்க் முறை லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகள் அறிமுகம் ஆகியுள்ள நிலையில் மெகா ஏலத்தை நடத்த முடிவு செய்தது பிசிசிஐ.

அதன்படி நேற்று மற்றும் நேற்று முன்தினம் பெங்களுரில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது மெகா ஏலம். அதில் பல எதிர்பாராத விசயங்கள் நடந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் எதிர்பார்த்த பல கிரிக்கெட் வீரர்கள் இந்த முறை எந்த அணியிலும் இடம்பெறவில்லை என்பது தான் அதிர்ச்சியே.

1. சுரேஷ் ரெய்னா.

தல ரெய்னா கடந்த பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இருப்பினும் அவர் சர்வதேச போட்டியில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் வெறும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி கொண்டு வந்த சுரேஷ் ரெய்னா சில குடும்ப பிரச்சனை காரணமாக ஐபிஎல் 2020 யில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் ஐபிஎல் 2022யில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை அடிக்கவில்லை. பின்னர் சுரேஷ் ரெய்னாவுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் ராபின் உத்தப்பா அணியில் இடம்பெற்றார். சரி எப்படியாவது சென்னை அணி அவரை கைப்பற்றும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சியது.

2. ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித், இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஹில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார். அதில் 8 போட்டிகளில் விளையாடி 152 ரன்களை அடித்துள்ளார்.

3. சாகிப் ஆல் ஹசன்

பங்களாதேஷ் அணியை சேர்ந்த வீரர் தான் சாஹிப். இவரது விளையாடி போக போக மோசமான நிலையை எட்டி வருகிறது. கடந்த ஆண்டு இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி உள்ளார். அதில் 8 போட்டிகளில் வெறும் 47 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். பின்னர் பவுலிங் செய்து நான்கு விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் சாஹிப்.

4. அடில் ரஷீத்

இங்கிலாந்து அணியை சேர்த்த இவர் ஐசிசி டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இப்பொழுது இருக்கும் வீரர்களில் இவர் மிகவும் திறமை வாய்ந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை.

5. இம்ரான் தாகிர்

சவுத் ஆப்பிரிக்கா அணியின் முக்கியமான சுழல் பந்து வீச்சாளர் தான் இம்ரான் தாகிர். 42 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த ஆண்டு ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி இம்ரான் தாகிர் 2 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

6. ஆரோன் பின்ச்

ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக வளம் வருகின்ற பின்ச்-க்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆமாம்..!! இவர் இறுதியாக 2020ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடியுள்ளார். அதில் மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடி வெறும் 268 ரன்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார். பின்னர் 2021 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அவரை அணியில் இருந்து விளக்கியது.

7. டேவிட் மலன்

இங்கிலாந்து அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக திகழ்ந்து வந்தவருக்கு இப்படி ஒரு நிலைமை ? கடந்த சில போட்டிகளில் அவரது விளையாட்டு மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் எந்த ஐபிஎல் அணியும் இவரை கைப்பற்ற நினைத்திருக்காது.

8. ஈயின் மோர்கன்

இங்கிலாந்து அணியின் கேப்டனான மோர்கன் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்தி இறுதி போட்டிவரை கொண்டு சென்றார். ஆனால் மோர்கன் பேட்டிங் செய்வதில் சோதப்பிவிட்டார். கடந்த ஆண்டு மொத்தம் 17 போட்டிகளில் விளையாடி வெறும் 133 ரன்களை மட்டுமே அடித்துள்ளார் மோர்கன். அதனால் எந்த அணியும் அவரை கைப்பற்ற முயற்சி செய்யவில்லை என்பது தான் உண்மை.