இந்தியா இப்ப இருக்கும் நிலைமைக்கு காரணமே இதுதான்; ஆஷிஷ் நெஹ்ரா விளக்கம்!!

0

இந்திய அணி இந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருவதற்கு முக்கிய காரணம் இதுதான் என்று ஆசை சினேகா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்திய அணி சமீபகாலமாக வெளிநாட்டு மைதானங்களில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மைதானங்களில் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது. 

இவை அனைத்திற்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்பட்டு வரும் விதமே காரணம் என்று அனைவராலும் கூறப்படுகிறது. இங்கிலாந்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு போட்டியிலும் குறைந்தபட்சம் 13 முதல் 15 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதேபோல் ஆஸ்திரேலிய மைதானத்தில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் குறைந்தபட்சம் 10 விக்கெட்டுகளை ஒவ்வொரு போட்டியிலும் கைப்பற்றியுள்ளனர். 

மூத்த வீரர்கள் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோர் இருந்தாலும் இளம் வீரர்களான பும்ரா, தாகூர் மற்றும் சிராஜ் ஆகியோரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பலப்படுத்துகின்றனர். 

ஐபிஎல் போட்டிகள் வந்த பிறகு இந்திய அணிக்கு இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் கிடைத்திருப்பதாகவும், அதன் காரணமாக இந்திய அணி எந்தவித தயக்கமுமின்றி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது என்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா கூறியிருக்கிறார். “ஐபிஎல் போட்டிகள், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. முன்பு ஒரு சில சர்வதேச போட்டிகளிலும், ஒரு சில உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடுவோம். அதற்கு இடையில் நீண்ட இடைவெளி இருக்கும். இதனால் காயம் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. காயம் ஏற்பட்டாலும் மாற்று வீரர்கள் இருக்க மாட்டர். 

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சுக்கு பஞ்சம் இருந்துவந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்திய அணி வேகப்பந்து வீச்சு அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர் தான். வீரர்கள் விளையாடுவதற்கு அதிக போட்டிகள் கிடைக்கின்றன. அதேபோல் ஐபிஎல் மூலம் பல இளம் வீரர்களும் இந்திய அணிக்கு கிடைத்திருக்கின்றனர். ஒருவர் இல்லை என்றாலும் மற்றொரு வீரர் அவரை நிரப்புவதற்கு எப்போதும் காத்திருக்கிறார்கள். ஒரே இடத்தில் பல வீரர்கள் இருக்கின்றனர். இதுதான் ஐபிஎல் தொடருக்கு கிடைத்த வெற்றி.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here