அன்று யுவராஜ் சிங் , இன்று பும்ரா ; இங்கிலாந்து பவுலரை வெச்சு செய்துள்ளனர். அதுவும் ஒரே பவுலர் தான் ;

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைபெற தொடங்கியது. இதுவரை சிறப்பாக விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 416 ரன்களை விளாசியது. அதில் அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 146 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்களையும் அடித்தார். பின்பு களமிறங்கியது இங்கிலாந்து அணி. இந்திய அணியை போலவே சரியான தொடக்க ஆட்டம் அமையாமல் போனது.

இருந்தாலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பரிஸ்டோவ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஆனால் அவர் ஆட்டம் இழந்த பிறகு மற்ற வீரர்கள் யாரும் சரியாக ரன்களை அடிக்க முடியாமல் போனது. அதனால் முதல் இன்னிங்ஸ்- முடிவில் 284 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணி 137 ரன்கள் முன்னிலையில் உள்ளனர்.

இப்பொழுது இரண்டாவது இன்னிங்ஸ் போட்டியில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டை இழந்த நிலையில் 125 ரன்களை அடித்துள்ளது இந்திய. இதில் முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய கேப்டன் பும்ரா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

16 பந்தில் 31 ரன்களை விளாசியுள்ளார். அதிலும் இங்கிலாந்து பவுலர் ஸ்டுவர்ட் பிரோட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை அடித்து டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்களை அடித்து உலக சாதனை செய்துள்ளார் பும்ரா. இதே பவுலர் கையில் தான் யுவராஜ் சிங் 2007ஆம் ஆண்டு தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்து மாஸ் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் ஒரு பேட்ஸ்மேன் (யுவராஜ் சிங்) விளையாடுவதற்கு, ஒரு பவுலர் (பும்ரா) அதிரடியாக விளையாடுவதற்கு நிறைய வித்தியாசம் உள்ளது. இந்திய அணியின் கேப்டனாக விளையாடிய பும்ரா ஆட்டம் இழக்காமல் 31 ரன்களையும், முதல் இன்னிங்ஸ்-ல் 3 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

முன்பு விராட்கோலி, ரோஹித் சர்மா, இப்பொழுது பும்ரா இந்தியா அணியின் டெஸ்ட் போட்டிக்கான சிறந்த கேப்டன் யார் ? உங்கள் கருத்துக்கள் மறக்காமல் கீழே உள்ள COMMENTS பண்ணுங்க..!