இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் இவங்க இருவர் தான் ; வருத்தத்தில் இருக்கும் இந்திய ரசிகர்கள் ;

டெஸ்ட் போட்டி :

பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மோதின. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். இதுவரை நடந்த நான்கு டெஸ்ட் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி, மீதமுள்ள ஒரு போட்டி ட்ராவில் முடிந்துள்ளது.

முதல் இன்னிங்ஸ்:

முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 84.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 416 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 146 மற்றும் ரவீந்திர ஜடேஜா 104 ரன்களை அடித்துள்ளனர். அதனால் தான் இந்திய அணியால் 400க்கு மேற்பட்ட ரன்களை அடிக்க முடிந்தது.

பின்பு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, தொடக்கத்தில் சோர்வாக விளையாடினர். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பரிஸ்டோவ் விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் ரன்கள் குவிந்தன. இருப்பினும் அவர் விக்கெட்டை இழந்த பிறகு பார்ட்னெர்ஷிப் அமையாமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர்.

அதனால் 61.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 284 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக பரிஸ்டோவ் 106 ரன்களை அடித்துள்ளார். அதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 138 ரன்கள் முன்னிலையில் இருந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸ்:

இரண்டாவது இன்னிங்ஸ் இந்திய கிரிக்கெட் அணிக்கு மோசமான போட்டியாக மாறியது தான் உண்மை. தொடக்க வீரரான சுமன் கில் முதல் இன்னிங்ஸ்-போலவே 3வது பந்தில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் புஜாரா, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் ரன்களை அடிக்க முயற்சி செய்தனர்.

அதனால் 81.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 245 ரன்களை மட்டுமே அடித்திருந்தது இந்திய கிரிக்கெட் அணி. ஆமாம்,இப்பொழுது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகின்றனர். இதுவரை 57 ஓவர் முடிந்த நிலையில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 259 ரன்களை அடித்துள்ளனர்.

அதிலும் ஜோ ரூட் மற்றும் பரிஸ்டோவ் ஆகிய இருவரும் சிறப்பான பார்ட்னெர்ஷிப் செய்து விளையாடி வருகின்றனர். அதனால் இந்திய அணிக்கு தோல்வி நிச்சியம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருப்பினும், 119 ரன்கள் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு தேவையாக உள்ளது.

நிச்சியமாக இவர்கள் விக்கெட்டை இழந்தாலும் அடுத்த இருக்கும் வீரர்கள் அதனை சுலபமாக அடித்து விட முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால் தொடர் ட்ராவில் முடிந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை…!