வீடியோ ; ஐபிஎல் போட்டிலேயே முதல் கேப்டன் இந்த சாதனையை செய்துள்ளார்…!! கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி..!!

வீடியோ ; ஐபிஎல் போட்டிலேயே முதல் கேப்டன் இந்த சாதனையை செய்துள்ளார்…!! கேக் வெட்டி கொண்டாடிய தல தோனி..!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்துள்ளது. அதனால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகம் ஆன ஐபிஎல் டி-20 லீக் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று சிறப்பான முறையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 106 ரன்களை எடுத்துள்ளது. பின்பு 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 15.4 ஓவர் முடிவில் 6 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்பொழுது சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நேற்று நடந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனிக்கு முக்கியமான போட்டியாகும். ஐபிஎல் விளையாட்டில் 200 போட்டிகளில் விளையாடி உள்ளார் தல தோனி. அதனால் சிஎஸ்கே அணியின் வீரர்கள் மகேந்திர சிங் தோனியை கேக் வெட்ட செய்து அவரை மகிழ்வித்தனர். அதன் வீடியோ இப்பொழுது சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் வெற்றியை கைப்பற்றி அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2008 ஆம் ஆண்டு, அதாவது ஐபிஎல் அறிமுகம் ஆன முதல் ஆண்டில் இருந்து 14வது ஆண்டு வரை ஒரே அணியில் கேப்டன் ஆக உள்ளார் மகேந்திர சிங் தோனி. அதனால் தமிழக மக்கள் அவரை மிகவும் நேசித்து வருகின்றனர். தோனி ஐபிஎல் போட்டியில் மட்டுமின்றி சர்வதேச போட்டியிலும் மகேந்திர சிங் தோனி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பதில் மாற்றுகருதில்லை…