சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவரா ? அப்போ பிரச்சனை தான் ..! இவரை கைப்பற்றியது சரியா? முழு விவரம் இதோ ;

0

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. பின்னர் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஐபிஎல் போட்டிகள் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் நடந்து வருகிறது. இதுவரை 14 சீசன் ஐபிஎல் நிறைவடைந்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் புதிதாக லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த முறை மெகா ஏலத்தை நடத்த முடிவு செய்தது. அதன்படி இப்பொழுது ஐபிஎல் ஏலம் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் ஏலம் என்றால் பல எதிர்பார்ப்புகள் இருக்கும்.

அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றால் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அணியை பின்பற்றி வருகின்றனர். இதுவரை அதிக முறை ப்ளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணியாக சென்னை உள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி , மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது சிஎஸ்கே.

இருப்பினும் சென்னை அணியில் யார் யார் ஏலத்தில் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அதில் ப்ராவோ, தீபக் சஹார், அம்பதி ராயுடு போன்ற வீரர்களை கைப்பற்றியுள்ளது சிஎஸ்கே. ஆனால் சற்றுமுன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரால் ஏதாவது பிரச்சனை வருமா ?

ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை தமிழர்கள் பிரச்சனை தமிழ்நாட்டில் அதிக அளவில் சர்ச்சை ஆனது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த இலங்கை வீரர்களும் விளையாட கூடாது என்றும், சென்னை மைதானத்திலும் இலங்கை வீரர்களை அனுமதிக்க கூடாது என்று பல பிரச்சனைகள் இருந்தன.

ஆனால் இப்பொழுது அனைத்து பிரச்சனைகளும் சரியான காரணத்தால் எந்த வீரர் வேண்டுமானலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றும் சென்னை மைதானத்தில் விளையாட அனுமதி வழங்கப்படுள்ளது. இப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை அணியை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளரான மாஹீஸ் தீக்சஹானா இடம்பெற்றுள்ளார்.

ஆமாம்..! இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணியின் ரிசர்வ் ப்ளேயராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை சென்னை அணி ; ஆஸிப், தீபக் சஹார், மஹீஸ் தீக்சஹானா, அம்பதி ராயுடு, சிவம் துபே, ப்ராவோ, துஷார் தேஷ்பாண்டே மற்றும் ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் சென்னை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here