விராட்கோலிக்கு பதிலாக சிஎஸ்கே வீரருக்கு அதிக விலை கொடுத்து கேப்டனை கைப்பற்றியதா ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ; அட..! நம்ம பையன் ;

0

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முறை லக்னோ மற்றும் குஜராத் போன்ற அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மற்ற அணிகள் அனைவரும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது.

மற்ற வீரர்கள் வீரர்கள் அனைத்தும் ஏலத்தில் பங்கேற்க போவர்கள் என்றும் பிசிசிஐ அறிவித்தது. அதன்படி இப்பொழுது ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த முறை கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூர் போன்ற அணிகளில் கேப்டன் இல்லாமல் தவித்து வந்தனர். அதனால் இந்த ஏலத்தை பயன்படுத்தி சரியான வீரரை தேர்வு செய்துள்ளது பெங்களூர் அணி.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி வரை விராட்கோலி தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக வழிநடத்தி வந்துள்ளார். ஐசிசி உலகக்கோப்பை டி-20 2021 போட்டிக்கு பிறகு நான் அனைத்து விதமான டி-20 போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்தும் விலக போவதாக அவரே அறிவித்தார்.

அதனால் கேப்டனை இழந்த நிலையில் இருந்தது. கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் விராட்கோலி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் போன்ற வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். நேற்று நடந்த முதல் நாள் ஏலத்தில் 7 கொடுத்து முன்னாள் தென்னாபிரிக்கா வீரரான டூப்ளஸிஸ் இடம்பெற்றுள்ளார்.

இவருக்கு அதிக அனுபவம் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் உள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார்.

மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 632 ரன்களை அடித்துள்ளார் டூப்ளஸிஸ். அப்படி இருந்தும் சிஎஸ்கே அணி கைப்பற்றவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. அதனால் பல போராட்டங்களுக்கு பின்பு பெங்களூர் அணி அவரை கைப்பற்றியுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிந்த டூப்ளஸிஸ் -க்கு போதுமான அளவு அனுபவம் மற்றும் திறமையும் உள்ளது. அதனால் நிச்சியமாக பெங்களூர் அணியின் கேப்டனாக இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விராட்கோலி மற்றும் டூப்ளஸிஸ் ஆகிய இருவரும் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

இனிவரும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை டூப்ளஸிஸ் கேப்டனாக வழிநடத்தினால் வெற்றி கிடைக்குமா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள comments பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here