முதல் போட்டியில் CSK ப்ளேயிங் – 11 இதுதான் ; வெற்றியை கைப்பற்றுமா சிஎஸ்கே ? தோனிக்கு ஏற்பட்ட சிக்கல் ? முழு விவரம் ;

0

ஐபிஎல் 2021; இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் நாளை இரவு முதல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் விறுவிறுப்பான போட்டிக்காக ஏங்கிக்கொண்டு இருக்கின்றன.

நாளை போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியம் பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி இப்பொழுது புள்ளிப்பட்டியளில் இரண்டாவது இடத்தில் சிஎஸ்கே அணியும், நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.

இதுவரை இந்த இரு அணிகளும் 31 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் அதிகபட்சமாக 19 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 12 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வென்றுள்ளது. நாளை போட்டியில் யார் வெற்றிபெற போகிறார்கள் என்பதை பார்க்கலாம். அதில் தோனிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதல் ஆட்டத்தில் முக்கியமான இரு வீரர்கள் விளையாட வாய்ப்பு இல்லாதது போல தெரிகிறது. அதில் ஒருவர் சாம் கரன் மற்றொருவர் டுபலஸிஸ் விளையாட வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அதனால் தோனி என்ன செய்ய போகிறார் ? நாளை போட்டியில் உத்தேச அணியின் விவரம் ;

ஓப்பனிங் ராபின் உத்தப்ப, ருதுராஜ் கெய்க்வாட், பின்பு சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, மற்றும் பவுலர்களில் தீபக் சஹார், லுங்கி நெகிடி, ஹாசல்வுட் போன்ற வீரர்கள் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது. ஒருவேளை சுழல் பந்து ஐக்கிய அரபு நாட்டில் சரிப்பட்டால் அப்பொழுது ஹசால்வுட் க்கு பதிலாக இம்ரான் தாகிர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாதி ஐபிஎல் போட்டிகள் முடிந்து ஐந்து மாதங்கள் கழித்து இப்பொழுது அது தொடங்கியுள்ளது. அதனால் எந்த அணி வெல்ல போகிறது என்பதை பொறுத்து தான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி ஐபிஎல் வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு நாட்டில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்த அணி கோப்பையை வெல்லும் ?? உங்க பதில் ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here