சிஎஸ்கே அணிக்கு தான் வெற்றியோ ; சென்னை அணியில் இருக்கின்ற 4 நல்ல விசியங்கள் ; முழு விவரம் ;

ஐபிஎல் 2021: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவல்கொடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்த ஐபிஎல் 2021 உடைய மீதமுள்ள 31 போட்டிகள் இன்று முதல் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியம் பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி, இன்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர்.

இதுவரை இவர்கள் 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 19 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 12 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வென்றுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ளது ஐபிஎல் போட்டிகளில் 7 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றிபெற்று புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே.

அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமான நிலையில் இருந்ததது. ஆனால் இந்தமுறை அப்படி இல்லை, இந்தியாவில் நடைபெற்று முடிந்த போட்டிகளில் மாஸ் காட்டியுள்ளது சிஎஸ்கே.

அதனால் அதேமாதிரி தான் மீதமுள்ள போட்டிகளிலும் சிஎஸ்கே அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்கு நல்ல விசியங்கள் இருக்கின்றனர். அதுமட்டும் சரியாக நடந்தால் நிச்சியமாக கோப்பையை கூட வெற்றிபெற முடியும்.

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ;

சிஎஸ்கேணியின் ஓப்பனிங் மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன ருதுராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா, டுப்ளஸிஸ், மொயின் அலி போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்துள்ளனர். அதனால் ரன்களை எடுப்பதில் எந்த சிரமமும் இருக்காது.

அதிக ரன்கள்:

நடந்து முடிந்துள்ளது முதல் பாதி போட்டிகளில் சிஎஸ்கே அணி குறைந்தது 170 ரன்களை முதல் பேட்டிங் செய்து அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அதிகபட்சமாக 220 ரன்களை அடித்துள்ளனர். அதனால் நல்ல டார்கெட் வைப்பதில் சிஎஸ்கே அணிக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.

ஆல் -ரவுண்டர்கள் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பான ஆல் -ரவுண்டர்கள் உள்ளனர். அதில் ரவீந்திர ஜடேஜா பத்தி சொல்ல வேண்டியதே இல்லை. ஏனென்றால் அவர் முதல் பாதி போட்டிகளில் எப்படி பேட்டிங் செய்தார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று.

அதேபோல தான் மொயின் அலி மற்றும் சாம் கரன் , மொயின் அலி-யின் அதிரடியான பேட்டிங் சிஎஸ்கே அணிக்கு அதிக டார்கெட் வைக்க உதவியாக தான் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி , பவுலிங் செய்து ம்முக்கியமான நேரத்தில் விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

தோனி கேப்டன் :

தோனி அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவம் என்பது அதிகம் தான். கடந்த ஆண்டு தான் சரியான ஆட்கள் யாரும் அணியில் இல்லாததால் சிஎஸ்கே அணி மோசமான நிலையில் போனது. ஆனால் இந்தமுறை வீரர்கள் அனைவரும் இருப்பதால் நிச்சியமாக ஐக்கிய அரபு நாட்டில் னால ஒரு கம்பேக் எதிர்பார்க்கலாம்.