சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனுக்கு காயம் ; என்ன செய்ய போகிறது சென்னை அணி ? மாற்று வீரர் யார் ?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் டி-20 2022 போட்டி வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 10 அணிகளுடன் விளையாட உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றிகளை கைப்பற்றிய அணிகளுள் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ். இதனை கடந்த 2008ஆம் ஆண்டு முதல் அதாவது ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து இப்பொழுது வரை நம்ம தல மகேந்திர சிங் தோனி சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த முறை இரு புதிய அணிகள் அறிமுகம் ஆகியுள்ளதால் மெகா பெரிய அளவில் ஏலம் நடத்தப்பட்டது.

அதனால் மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கூறியது பிசிசிஐ. அதன்படி சிஎஸ்கே அணியில் மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்தது பிசிசிஐ.

ஆமாம், ருதுராஜ் கெய்க்வாட் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். அதில் பெரிய அளவில் விளையாடவில்லை. இருப்பினும் கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட்-முதல் இடத்தை கைப்பற்றினார்.

அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரராக ருதுராஜ் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சீரியஸ் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்துள்ளது இந்திய அணி.

அதில் ருதுராஜ் கெய்க்வாட்-கு காயம் ஏற்பட்டது, இருப்பினும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் அவருடைய காயம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவரை (ருதுராஜ் கெய்க்வாட்)-க்கு பதிலாக மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளார்.

இதேபோல தான் தீபக் சஹாருக்கு காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்கள். இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் இவர்கள் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவார்களா ?? இல்லையா ? ருதுராஜ் முக்கியமான பேட்ஸ்மேன், அதேபோல தீபக் சஹர் முக்கியமான பவுலர்.

என்ன செய்ய போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ? இவர் இருவருக்கு (தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்) ஆகிய இருவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!