இரு ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் போட்டியில் நடக்க போகின்ற அதிசயம் ; உற்சாகத்தில் மூழ்கிய கிரிக்கெட் ரசிகர்கள்…! அப்படி என்ன ?

0

கிரிக்கெட் ரசிகர்கள் சர்வதேச போட்டிகளை விட இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளின் மீது அதிக ஆர்வம் இருக்கும். ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது பிசிசிஐ. பின்னர் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் டி-20 லீக் போட்டி என்றால் அது இந்தியாவில் மட்டுமே நடைபெறும். ஒருவேளை இந்தியாவில் தேர்தல் நடைபெற்றால் வெளிநாடுகளில் போட்டியை நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த 2020 மற்றும் 2021 போட்டிகளில் கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகம் உள்ளதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்தது.

மக்கள் எங்கு அதிகம் உள்ளார்களோ அங்கு தான் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் 2020 மற்றும் 2021 ஐபிஎல் போட்டிகளில் மக்கள் யாரும் மைதானத்தில் வந்து நேரில் பார்க்க அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியது. அதனால் அனைத்து ரசிகர்களும் வீட்டில் இருந்த படி போட்டியை கண்டுகளித்து வந்தனர்.

ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் குறிப்பிட்ட சில மைதானங்களில் மட்டுமே நடத்த உள்ளதாக பிசிசிஐ கூறியது. இப்பொழுது இந்தியாவில் இருக்கும் கொரோனா தாக்கம் தொடர்ந்தால் மக்களை மைதானத்திற்குள் அனுமதிக்க போவதாக சில தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும் மஹாராஷ்டிராவில் நடைபெற உள்ள போட்டியில் 40% (சதவீதம்) பேரை அனுமதிக்க போவதாக சில தகவல் வெளியாகி வருகிறது. மற்ற சர்வதேச போட்டிகளை காட்டிலும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளை நேரில் பார்த்தால் தான் சுவாரஷியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் வருகின்ற மார்ச் 26ஆம் முதல் தொடங்க உள்ளது. அதுமட்டுமின்றி இந்த முறை இரு புதிய அணிகளை அறிமுகம் செய்ததால் 10 ஐபிஎல் அணிகளை கொண்டு விளையாட உள்ளது. இதுவரை 14 சீசன் ஐபிஎல் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

அதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும், கம்பிர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரு முறையும் சாம்பியன் படத்தை வென்றுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிக்கான சாம்பியன் படத்தை வெல்ல போவது யார் ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here