சிஎஸ்கே அணி முதலில் தேர்வு செய்ய போகும் வீரர் இவர் தான் ; ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி

வருகின்ற 12ஆம் மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது ஐபிஎல் 2022 போட்டிக்கான மெகா ஏலம். அதற்கு முக்கியமான காரணம் லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்து பிசிசிஐ. அதனால் யார் யார் எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்று பல குழப்பத்தில் உள்ளனர்.

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் இதுவரை 14 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆமாம்..! அதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, தோனி மட்டும் தான் ஐபிஎல் 2008 ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்பொழுது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக வளம் வருகிறார்.

மெகா ஏலம் இந்த முறை நடைபெற உள்ளதால் புதிய இரு அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ கூறியது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களை சிஎஸ்கே அணியின் தக்கவைத்துள்ளனர்.

இதற்கிடையில் சிஎஸ்கே அணியில் யார் யார் ஏலத்தில் இடம்பெற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுகின்றன. இதனை பற்றி பேசிய இந்திய வீரர் மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் ; கடந்த முறை சிஎஸ்கே அணி 1.5 கோடி கொடுத்து டூப்ளஸிஸ் -ஐ அணியில் கைப்பற்றினார்கள்.

ஆனால் இந்த முறை பல கோடிக்கு விலை போவார். அதுமட்டுமின்றி, இந்த முறை டூப்ளஸிஸ் அணியில் கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதனால் சிஎஸ்கே அணி அதிக விலை கொடுத்து டூப்ளஸிஸ் ஐ-அணியில் தக்கவைக்க முயற்சி செய்ய வேண்டும்.

எனக்கு தெரிந்து நிச்சியமாக டூப்ளஸிஸ் அதிக அணியால் போட்டியிடப்பட்டு தான் கைப்பற்றபடுவார் என்று கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். ஐபிஎல் 2021யில் சிஎஸ்கே அணி தான் சாம்பியன் படத்தை வென்றுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் தான்.

ஆமாம் டூப்ளஸிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, மொத்தம் 16 போட்டிகளில் விளையாடி 633 ரன்களை அடித்துள்ளார் டூப்ளஸிஸ். ஆனால் டுப்ளஸிஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அதனை மனதில் வைத்துக்கொண்டு தான் ஏலத்தில் அவரை கைப்பற்ற முன்வருவார்கள்.