ரிஷாப் பண்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க காரணம் இதுதான் ; புதிய முயற்சி தான் எல்லாம் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்கள்.

அதன்படி முதலில் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்தில் சரியான ஆட்டம் அமையவில்லை. ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட் மற்றும் விராட்கோலி போன்ற மூன்று வீரர்கள் குறைவான ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை விளையாடியதால் இந்திய அணி 200க்கு மேற்பட்ட ரன்களை அடிக்க முடிந்தது.

நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 237 ரன்களை அடித்துள்ளனர். அதில் ரோஹித் சர்மா 5, ரிஷாப் பண்ட் 18, விராட்கோலி 18, கே.எல்.ராகுல் 49, சூர்யகுமார் யாதவ் 64, வாஷிங்டன் சுந்தர் 24, தீபக் ஹூடா 29,ஷர்டுல் தாகூர் 8, முகமது சிராஜ் 3 , யுஸ்வேந்திர சஹால் 11 போன்ற ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 238 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடர்ந்து பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் ரன்களை அடிக்க முடியாமல் தினறிக்கொண்டு வந்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதிகபட்சமாக ப்ரூக்ஸ் 44, ஹோசின் 34 ரன்களை அடித்துள்ளனர்.

46 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 193 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்கள். அதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி. அதனால் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. அதனால் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. போட்டி முடிந்த பிறகு ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் ;

தொடரை கைப்பற்றியது சந்தோசமாக உள்ளது. அதில் பல சவால்கள் உள்ளனர். கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் சிறப்பான பார்ட்னெர்ஷிப் ஐ- வெளிப்படுத்தினார்கள். அதனால் இறுதியாக நல்ல ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது. இந்திய அணி முதல் 3 விக்கெட்டை விரைவாக இழந்த நிலையில் இந்திய அணியின் சூழ் நிலையை புரிந்து கொண்டு சூர்யகுமார் மற்றும் கே.எல்.ராகுல் விளையாடியுள்ளனர்.

அதிலும் இந்த போட்டியில் இஷான் கிஷானுக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியில் இடம்பெற்றார். அதிலும் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்க முடிவு செய்தோம். அதனால் வேறு வழியில்லாமல் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். அதனால் தொடக்க வீரராக ரிஷாப் பண்ட் ஐ- விளையாட வைத்தோம். இதனை புதிதாக செய்ய முடிவு செய்தோம். மாற்றம் எப்பொழுதும் மாறாத ஒன்று. எதுவும் நிறந்திரமில்லை என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.