இந்த மூன்று வீரர்களில் ஒருவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஏலத்தில் கைப்பற்ற போகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் 2022 போட்டிகளுக்கான மெகா ஏலம் நாளை முதல் நடைபெற உள்ளது. இந்த முறை 12ஆம் மற்றும் 13ஆம் தேதிகளில் ஏலம் நடைபெற உள்ளதாக பிசிசிஐ கூறியது. அதுமட்டுமின்றி, இந்த முறை லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் யார் யார் எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்று பல கேள்விகள் எழுந்தன. அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார் இடம்பெற போகிறார்கள் என்ற கேள்வியும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, மகேந்திர சிங் தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு வீரர்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதற்கு முக்கியமான காரணம் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் தான். ஆமாம்..! ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளஸிஸ் போன்ற இரு பேட்ஸ்மேன்கள் தான் பார்ட்னெர்ஷிப் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளனர்.

அதிலும் ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் ருதுராஜ் மற்றும் இரண்டாவது இடத்தில் டூப்ளஸிஸ் இருவரும் தான். அதில் டூப்ளஸிஸ் அணியில் தக்கவிக்காதது அதிர்ச்சியாக தான் உள்ளது. இருப்பினும் மீண்டும் அணியில் கைப்பற்ற படுவாரா என்று கேட்டால் அது சந்தேகம் தான்.

இந்த முறை ஏலத்தில் இவர்கள் மூன்று வீரர்களில் ஏதாவது ஒருவரை அணியில் கைப்பற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதல் வீரர் டூப்ளஸிஸ் தான். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை சென்னை அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். அதனால் டூப்ளஸிஸ் மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட்-டன் பார்ட்னெர்ஷிப் செய்தால் சிறப்பான ஆட்டமாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

இரண்டாவதாக டேவிட் வார்னர் தான், கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் கேப்டனாக விளையாடி வந்தார். ஆனால் முதல் 8 போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி. அதனால் வார்னரை அணியில் இருந்து வெளியேற கென் வில்லியம்சன் கேப்டனாக பொறுப்பேற்றார்.

அதன்பின்னர் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனால் அதனை தொடர்ந்து நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய வார்னர் ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார். அதனால் நிச்சயமாக ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தில் நல்ல விலைக்கு போவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றால் நிச்சியமாக வலுவான ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் அமையும் என்பதில் சந்தேகமில்லை. மூன்றாவதாக ஷிகர் தவான், கடந்த ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டியில் 587 ரன்களை அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தக்கவைக்கப்படாதது அதிர்ச்சியாக இருக்கிறது. ஷிகர் தவான் சென்னை அணியில் இடம்பெற்றால் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரும் சிறப்பான பார்ட்னெர்ஷிப் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது. ருதுராஜ் வலது கை பேட்ஸ்மேன், ஷிகர் தவான் இடது காய் பேட்ஸ்மேன், அதனால் இந்த பார்ட்னெர்ஷிப் வலுவாக அமைய அதிக வாய்ப்பு உள்ளனர்.