விராட், ஜடேஜா இல்லை ; இந்திய அணியின் அசைக்க முடியாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இவர் தான் ; வேறு யாருமில்லை ;

0

இன்றைய மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ்அவுட் செய்யுமா ? இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை கைப்பற்றியது. அதில் கே.எல்.ராகுல் தான் இந்திய கிரிக்கெட் அணியை தலைமை தாங்கி வழிநடத்தினார். அதில் ரோஹித் சர்மா இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குனார்.

ஆனால் ஒரு கேப்டனாக இந்திய அணியை வெற்றி பாதைக்கும் கொண்டு செல்லவில்லை, ஒரு பேட்ஸ்மேனாக ரன்களையும் அடிக்கவில்லை. சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 12, 55, 9 ரன்களை அடித்துள்ளார். மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்துகொண்டு வந்த கே.எல்.ராகுல் ஏன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார் ? என்று பல கேள்விகள் எழுந்தன.

இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, விராட்கோலி, ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூரியகுமார் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் இந்தியா அணியை சிறப்பாக வழிநடத்தி வந்தனர்.

அதனால் தான் இந்திய கிரிக்கெட் அணியால் 237 ரன்களை அடிக்க முடிந்தது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் எனக்கு தெரிந்து கே.எல்.ராகுல் ஒரு முழுமையான இந்திய வீரர். அவருக்கு பதிலாக அடுத்த வீரர் இவர் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.

அதுமட்டுமின்றி, அவருக்கு பதிலாக 5வது மற்றும் 6வது இடத்தில் விளையாட முடியாது. அதனால் கே.எல்.ராகுல் இனிமேல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடுவதற்கு பதிலாக மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும். கே.எல்.ராகுலுக்கு இப்பொழுதெல்லாம் ஓப்பனிங் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை.

ஏனென்றால் அந்த இடத்திற்கு ஷிகர் தவான் உள்ளார். அதனால் ராகுல் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தால் தான் சிறப்பான மிடில் ஆர்டர் அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுவும் சூர்யகுமாருடன் பார்ட்னெர்ஷிப் செய்தால் அதிக ரன்களை அடிக்க முடியும் என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here