ஐபிஎல் 2021 ; சிஎஸ்கே அணிக்கு ஏற்படப்போகும் பெரிய ஆபத்து இதுதான் ; சேவாக் ஓபன் டாக் ; வெற்றி பெற வாய்ப்பே இல்லையா !!!

மேட்ச் 30; இன்று இரவு மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர். இதுவரை 31 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 19 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும் 12 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வென்றுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் அரம்பித்தாளே.. பல கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்வது வழக்கம் அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் நடைபெற்ற போட்டிகளில் அதிக ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது.

ஆனால் நிச்சியமாக ஐக்கிய அரபு நாட்டில் சிஎஸ்கே அணிக்கு பேட்டிங்கில் தடுமாற்றம் ஏற்படும். அதனை சரியாக புரிந்து கொண்டு விளையாடினால் வெற்றிபெறும் அப்படி இல்லையென்றால் நிச்சியம் தோல்வி தான் என்று கூறியுள்ளார் சேவாக். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியால் சரியாக ரன்களை அடிக்க முடியாமல் போனது தான் காரணம்.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டி தான் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான நிலைமைக்கு போனது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு தான் சிஎஸ்கே அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு போகாமல் போனதுக்கு காரணம். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களும் சோகத்தில் மூழ்கினார்.

ஆனால் ஐக்கிய அரபு நாட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார் சேவாக். இதுவரை 13 சீசன் ஐபிஎல் போட்டிகளில் ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி, மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி என்றாலே இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் போல் தான் இருக்கும்.

விறுவிறுப்பான போட்டிக்கு கண்டிப்பாக பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி ஐபிஎல் 2021 முதல் பாதி போட்டிகள் நடந்து முடிந்து ஐந்து மாதங்கள் ஆகியுள்ளது. அதனால் இன்றைய போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.