சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே சரியில்லை ; அதிக விலை கொடுத்து வாங்கிய வீரருக்கு காயம் ..! என்ன செய்ய போகிறார் தோனி ?

0

ஐபிஎல் 2022 போட்டிகள் வருகின்ற ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முறை இரு புதிய அணிகளான லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது. அதனால் தான் இந்த ஆண்டு ஐபிஎல் டி20 2022யில் மொத்தம் 10 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற அணிகளுள் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. ஏலத்திற்கு முன்பு சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, மகேந்திர சிங் தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்து சிஎஸ்கே.

இந்த பட்டியலில் எந்த வேகப்பந்து வீச்சாளரும் இடம்பெறவில்லை. அதனால் ஏலத்தில் தீபக் சஹாரை போட்டிபோட்டுக்கொண்டு ஏலத்தில் ஈடுபட்டது சென்னை. அதில் தீபக் சஹாருக்கு 14 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தீபக் சஹார் கடந்த இரு ஆண்டுகளாக முக்கியமான பவுலராக விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி, அவரது பவுலிங் மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆமாம்..! இதற்கிடையில் இன்று முதல் இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி-20 மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதற்கான அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

அதில் டி-20 அணியில் தீபக் சஹார் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவருடைய தொடை தசை காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியில் வெளியேறியுள்ளார். அதுமட்டுமின்றி, அபியேல் 2022 போட்டிகள் நடைபெற இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் இவருக்கு காயம் ஏற்பட்டது சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும்.

ஏனென்றால் சென்னை அணி தீபக் சஹாருக்கு தான் அதிகபட்ச விலையான 14 கோடி கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி இப்பொழுது வந்த தகவலின் படி அவருடைய காயம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் நிச்சியமாக ஐபிஎல் 2022 போட்டியில் விளையாட முடியாது என்று தெரிகிறது.

இவருக்கு பதிலாக யார் சென்னை அணியில் விளையாட போகிறார் ? முக்கியமான வேகப்பந்து வீச்சாளருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் என்ன செய்ய போகிறார் மகேந்திர சிங் தோனி ? சிறப்பான ப்ளேயிங் 11 அமையுமா ?? தீபக் சஹாருக்கு பதிலாக யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? என்று உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here