ருதுராஜ் கெய்க்வாடுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க போகும் வீரர் இவர் தான் ; அப்போ பட்டைய கிளப்ப போகிறதா சிஎஸ்கே ;

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2022 போட்டி வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அதுவும் இந்த முறை புதிதாக லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது.

அதனால் இந்த முறை மிகப்பெரிய அளவில் ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்துள்ளது. அதில் பல சுவாரஷிமான நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளது. ஆமாம்..! கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 சாம்பியன் படத்தை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

ஆமாம்.., ஏனென்றால் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் மற்றும் டூப்ளஸிஸ் போன்ற இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். ஆமாம்… இவர்கள் இருவரால் தான் சிஎஸ்கே அணி பல போட்டிகளில் வென்றதற்கு முக்கியமான காரணமும் கூட.

ஆனால் மெகா ஏலம் என்றதால் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும் பிசிசிஐ கூறியது. அதனால் ருதுராஜ் கெய்க்வாட்-ஐ- மட்டும் தக்கவைத்து சிஎஸ்கே டூப்ளஸிஸ் ஐ தவறவிட்டது. இருப்பினும் ஏலத்தில் அவரை கைப்பற்ற முயற்சி செய்த போது பெங்களூர் அணி அதிக விலை கொடுத்து டூபிளெஸ்ஸிஸ் ஐ கைப்பற்றியுள்ளனர்.

அதனால் ருதுராஜ் கெய்க்வாடுடன் கைகோர்க்க போகும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி தான் இப்பொழுது மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளது. ஆமாம்..! கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகம் ஆன ராபின் உத்தப்பாவுக்கு முதல் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

அதில் சுரேஷ் ரைனாவுக்கு காயம் ஏற்பட்டகாரணத்தால் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா அணியில் இடம்பெற்றார். அதுமட்டுமின்றி சிறப்பாக டாப் ஆர்டர் அமைய காரணமாக இருந்தார் உத்தப்பா. அதுமட்டுமின்றி உத்தப்பா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா அநைட் ரைடர்ஸ் அணியில் தான் விளையாடி வந்தார்.

அதில் ராபின் உத்தப்பா தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன். அதனால் நிச்சியமாக இதனை மனதில் கொண்டு தான் ராபின் உத்தப்பாவை 2 கோடி விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதனால் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இருவரும் தான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

சென்னை ரசிகர்களே நீங்க சொல்லுங்க ராபின் உத்தப்பா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினால் சிறப்பாக இருக்குமா ?? இல்லையா ?? உங்கள் கருத்தை மறக்காமல் கமெண்ட்ஸ் பக்கத்தில் பதவி செய்யுங்கள்..!