திரும்ப வந்துட்டேனு சொல்லு ; இந்திய கிரிக்கெட் அணிக்கு ரீ-என்ட்ரி கொடுத்த நட்சத்திர வீரர் ; இனி கவலையே இல்லை ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டியில் 3 – 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்தது இந்திய. அதுமட்டுமின்றி மூன்று டி-20 போட்டிகளில் விளையாடிய இந்திய 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளனர்.

இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ளது. டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்றுமா ? இந்திய கிரிக்கெட் அணி ?

இந்திய அணிக்கு அடுத்த விளையாட போகும் தொடர் போட்டிகளின் விவரம் ;

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் ஜிம்பாபே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். பின்பு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் வரை ஆசிய கோப்பைக்கான போட்டிகள் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று டி-20 மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டியில் விளையாட உள்ளனர். அதனை அடுத்து ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி விளையாட உள்ளனர்.

ஜிம்பாபே அணிக்கு எதிரான தொடர் போட்டி :

சமீபத்தில் தான் ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் விளையாட போகும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை அறிவித்தது பிசிசிஐ.

இந்திய அணியின் விவரம் இதோ :

ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ராகுல் த்ரிப்தி, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷர்டுல் தாகூர், குலதீப் யாதவ், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமத் சிராஜ் மற்றும் தீபக் சஹார்.

இதில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான ஆல் – ரவுண்டராக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பவுலிங் மட்டுமின்றி ஒரு பேட்ஸ்மேனாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் ஐபிஎல் 2022 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. அதன்பின்னர் இந்திய அணி விளையாடிய எந்த போட்டியிலும் தீபக் சஹாரால் கலந்துகொள்ள முடியாமல் போனது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஜிம்பாபே அணிக்கு எதிரான போட்டியில் விளையாட போகிறார்.

ஒருவேளை சிறப்பாக விளையாடினால் இந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது..! தீபக் சஹார் இந்திய அணிக்கு தேவையான வீரரா ?