இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளோம் ; சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறோம் ; ரோஹித் சர்மா பேட்டி ;

இன்று முதல் தொடங்கியது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்.

அகமதாபாத்-தில் இன்றைய முதல் போட்டி நடைபெற உள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் செய்ய முடிவு செய்தது. இன்றைய போட்டி இந்திய அணிக்கு 1000வது ஒருநாள் போட்டியாகும். இதில் இந்திய அணி வெல்லுமா ???

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் ; முதலில் பவுலிங் செய்ய ஆசைப்படுகிறோம். நாங்கள் லைட் வெளிச்சத்தில் பேட்டிங் செய்ய ஆசைப்படுகிறோம். நான் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவது சந்தோஷமாக உள்ளது.

நான் இறுதியாக போட்டிகள் விளையாடி 2 மாதங்கள் இருக்கும். ஆனால் இன்றைய தினம் எனக்கு மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான நாள் ஆகும். ஏனென்றால் இன்று இந்திய அணி 1000 வது போட்டியில் ஒருநாள் போட்டியாகும். இதுவரை நாங்கள் பல ஏற்றம் இறக்கம் பார்த்துவிட்டோம். ஒரு அணியாக இவ்வளவு தூரம் நாங்கள் வந்துள்ளோம், இதனை பின்பற்றி தொடருவோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

அதுமட்டுமின்றி இந்திய அணியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் , சில புதிய வீரர்களை அறிமுகம் செய்துள்ளோம். தீபக் ஹூடா அவரது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்க உள்ளார், அவரது விளையாட்டு எப்படி இருக்கும் இந்திய அணிக்கு அது எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை பார்க்கலாம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

இந்திய அணியின் ப்ளேயிங் 11 இதோ ;

ரோஹித் சர்மா, இஷான் கிஷான், விராட்கோலி, ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ் , தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷ்ரடுல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், பிரஷீத் கிருஷ்ணா, முகமது சிராஜ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அணியில் இடம்பெற்ற முடியவில்லை. அதனால் மோத தொடரில் இருந்து வெளியேறினார் ரோஹித். அதன்பின்னர், இப்பொழுது களமிறங்கியுள்ளார் ரோஹித்.