வீடியோ : First Wide , பிறகு விக்கெட் என்று கூறிய நடுவர் ; என்னதான் நடக்குது ? தீபக் ஹூடாவின் விக்கெட் ;

நியூஸிலாந்து மற்றும் இந்திய : டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டி-20 போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்ததால் தொடரை வென்றனர்.

அதனையடுத்து இப்பொழுது ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த ஒருநாள் போட்டிகளில் நியூஸிலாந்து அணி 1 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் நிச்சியமாக இந்திய அணி வெல்ல வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.

மூன்றாவது போட்டி விவரம் :

இன்று காலை 7 மணியளவில் ஓவல் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி வழக்கம்போல பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கியது இந்திய. ஆனால் வழக்கம்போல இந்திய அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. சுப்மன் கில் மற்றும் ஷிகர் தவான் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர்.

அதே வேகத்தில் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்டை இழந்த காரணத்தால் பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. சரியாக 47.3 ஓவர் முடிவில் அனைத்து (10) விக்கெட்டையும் இழந்த இந்திய கிரிக்கெட் அணி வெறும் 219 ரன்களை மட்டுமே அடித்தனர். அதில் வாஷிங்டன் சுந்தர் 51, ஸ்ரேயாஸ் ஐயர் 49 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

தீபக் ஹூடா விக்கெட் :

சரியாக 33 வது ஓவரில் டிம் சவூதி வீசிய பந்தை எதிர்கொண்டார் தீபக் ஹூடா. அப்பொழுது பந்து தீபக் ஹூடாவிற்கு பின்னால் சென்றது. ஆனால் அதற்கு நடுவர் முதலில் Wide என்று கொடுத்தார். அதனை நியூஸிலாந்து அணியின் வீரர்களும் விக்கெட் என்று கேட்கவில்லை. ஆனால் நியூஸிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான லத்தம் உறுதியாக இல்லையென்றாலும், டிவி நடுவரின் விக்கெட் ஆ ? இல்லையா ? என்று கேட்டனர்.

பின்னர் தான் தெரிந்தது, அந்த பந்து தீபக் ஹூடாவின் பேட் நுனியில் பட்டு தான் சென்றது என்று. அதனால் விக்கெட் என்று அறிவித்தனர். ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ?