ஒரு ஆல் – ரவுண்டர் விளையாடுகின்ற அளவிற்கு கூட ரிஷாப் பண்ட் விளையாடுவதே இல்லை ; முதல் இன்னிங்ஸ் முடிவுகள் ;

0
Advertisement

நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த டி-20 போட்டிக்கான தொடரில் 1 – 0 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியது இந்திய. ஆனால் ஒருநாள் போட்டிக்கான தொடரில் தோல்வியை தான் பெற போகிறது.

ஆமாம், கடந்த 25ஆம் தேதி அன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது நியூஸிலாந்து அணி. பின்பு இரண்டாவது போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இன்று நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி தொடர் ட்ராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆமாம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய வீரர்களான ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தவில்லை. பின்பு ஸ்ரேயாஸ் நிதானமாக விளையாடி ரன்களை அடித்தார்.

ஆனால் இந்திய வீரர்களின் விக்கெட்டை தொடர்ந்து கைப்பற்றிய காரணத்தால் 47.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 219 ரன்களை மட்டுமே அடித்துள்ளது இந்திய.

ரன்களின் விவரம் இதோ :

ஷிகர் தவான் 28, சுப்மன் கில் 13, ஸ்ரேயாஸ் ஐயர் 49, ரிஷாப் பண்ட் 10, சூரியகுமார் யாதவ் 6, தீபக் ஹூடா 12, வாஷிங்டன் சுந்தர் 51, தீபக் சஹார் 12, யுஸ்வேந்திர சஹால் 8, அர்ஷதீப் சிங் 9 ரன்களை அடித்துள்ளனர்.

அதனால் 220 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. இதில் நிச்சியமாக நியூஸிலாந்து அணி தான் போட்டியில் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

மோசமான நிலையில் இருக்கும் இந்திய :

டி-20 போட்டிக்கான இந்தியா கிரிக்கெட் அணியில் பேட்டிங் வலுவாக இருந்தாலும், பவுலிங் மோசமான நிலையில் இருக்கிறது தான் உண்மை. ஆனால் இப்பொழுது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியை பார்த்தால் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரு விஷயங்களும் கவலையான இடத்தில் இருக்கிறது தான் உண்மை. அதிலும் குறிப்பாக ரிஷாப் பண்ட்.

ஆமாம், சமீப காலமாகவே அவரது விளையாட்டால் இந்தியா அணிக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமின்றி, நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான தொடரில் துணை கேப்டனாக இருக்கும் ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு இந்திய அணிக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துள்ளது.

டி-20 போட்டிக்கான தொடரில் 6,11 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிக்கான தொடரில் 15, 10 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இந்திய அணியின் ஆல் – ரவுண்டராக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர் அவ்வப்போது போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பது சிரமமாக தான் இருக்கிறது. ஆனால் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தர், இந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 37* மற்றும் 51 ரன்களை அடித்துள்ளார்.

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் திறமையான வீரர்கள் பலர் அணியில் இருக்கும் நிலையில் ஏன் ? ரிஷாப் பண்ட் -க்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ரிஷாப் பண்ட் -ஐ விட சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிக்கான தொடரில் சிறப்பாக தான் விளையாடி வருகிறார்.

புள்ளிவிவரம் :

ரிஷாப் பண்ட் : இதுவரை 30 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 865 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 125 ரன்களை அடித்திருக்கிறார். அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக 34.60 (Average) ரன்களை அடித்து வருகிறார் ரிஷாப்.

சஞ்சு சாம்சன் : வெறும் 11 போட்டிகளில் மட்டுமே விளையாடிய சஞ்சு சாம்சன் 330 ரன்களை விளாசியுள்ளார். அதில் அதிகபட்சமாக 77 ரன்களை அடித்துள்ளார் சஞ்சு சாம்சன். அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக 66 ரன்கள் என்ற கணக்கில் ரன்களை அடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here