ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு தான் இந்திய அணியின் கேப்டனாக போவது இவர் தான் , அதில் சந்தேகமில்லை ; ரிக்கி பாண்டிங் பேட்டி ;

0

ஐபிஎல் 2022 : நேற்று முமபையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியது முதல் ஐபிஎல் 2022 போட்டிகள். அதில் சென்னை அணியம் கொல்கத்தா அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 131 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்பு 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி. இறுதிவரை போராடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர் முடிவில் 133 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்துவிட்டால் போது அவரவர் கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம் தான். அதேபோல தான் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிச்சியாளரான ரிக்கி பாண்டிங் -யிடம் ரோஹித் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் இடையே ஏதாவது வித்தியாசம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங் கூறுகையில் ; ” நான் அதனை பற்றி எல்லாம் யோசனை செய்ததே இல்லை. ஆனால் அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருப்பது போல தான் எனக்கு தெரிகிறது. ஆமாம், ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த தொடங்கியது போது சின்ன பையனாக இருந்தார்.”

“பின்னர் சர்வதேச போட்டிகளிலும் சிறப்பாக விளையாட தொடங்கியுள்ளார் ரோஹித் சர்மா, அந்த நேரத்தில் ரோஹித் ஷர்மாவுக்கு சுமார் 23 அல்லது 24 வயது தான் இருக்கும். இப்பொழுது அந்த வயதில் தான் ரிஷாப் பண்ட் உள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ரோஹித் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் இருவரும் ஒரே மாதிரி தான்.”

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா எப்படி வெற்றிகளை கைப்பற்றி சாதனை செய்துள்ளாரோ, அதேபோல தான் ரிஷாப் பண்ட் இப்பொழுது டெல்லி கேபிட்டல்ஸ் அணியிலும் விளையாடி வருகிறார்.

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவி பற்றி பேசிய ரிக்கி பாண்டிங் ; “கடந்த மாதம் தான் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமனம் செய்தது பிசிசிஐ. அந்த நேரத்தில் மூன்று இளம் வீரர்களில் பெயர் வந்தது, அதில் ரிஷாப் பண்ட் ஒருவர் தான்.”

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகளில் ரோஹித் ஷர்மாவுக்கு துணையாக விளையாடினார் ரிஷாப் பண்ட். இது போன்ற முக்கியமான நேரங்களில் ரிஷாப் பண்ட் க்கு ஏற்படும் அனுபவம் மிகவும் முக்கியமான ஒன்று. அதுவும் ஐபிஎல் போன்ற போட்டிகளில் ஏற்படும் அழுத்தம், தான் சர்வதேச போட்டிகளில் கேப்டனாக மாற்றும்.”

“ஆமாம் , ரிஷாப் பண்ட் சர்வதேச போட்டிகளில் கேப்டனாக வரலாம், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here