முக்கியமான பேட்ஸ்மேன் இல்லாமல் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி ; யார் அந்த வீரர் ? ஏன் ப்ளேயிங் 11ல் இடம்பெறவில்லை ;

0

இன்று மதியம் 3:30 மணியளவில் தொடங்க உள்ள போட்டியில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளார். இந்த போட்டி முமபையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற உள்ளது.

டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷாப் பண்ட் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இதுவரை மொத்தம் 30 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளது, அதில் டெல்லி அணி 14 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 14 முறையும் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இதுவரை 14 முறை ஐபிஎல் சீசன் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. டெல்லி அணி ஒரு முறை கோப்பையை வென்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளேயிங் 11 : ரோஹித் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, அன்மோல்ப்ரீட் சிங், பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின், டிமால் மில்ஸ், பும்ரா, பசில் தம்பி போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்..!

அப்போ நம்பிக்கை நாயகன் சூர்யகுமார் யாதவ் அணியில் இல்லையா ?? அவருக்கு என்ன ஆச்சு என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. ஆமாம், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரோஹித் சர்மா, இஷான் கிஷான் போன்ற வீரர்களை தக்கவைத்துள்ளது மும்பை.

ஆனால் இன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் இல்லை ? சூரியகுமார் யாதவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கையில் பலமாக அடிபட்டது. அதனால் பெங்களூரில் உள்ள NCA வில் சில நாட்கள் ஓய்வு எடுத்து வருவதால் அவரால் முதல் போட்டியில் நிச்சியமாக பங்கேற்க முடியாது என்று ரோஹித் சர்மா கூறினார்.

அதேபோல நேற்று சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் மூன்று நாட்கள் தனிமையில் இருந்த பிறகு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.

அந்த போட்டியில் சூர்யகுமார் நிச்சியமாக ப்ளேயிங் 11ல் இடம்பெறுவார் என்பதில் சந்தேகமில்லை…! கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் 14 போட்டிகளில் விளையாடி 317 ரன்களை அடித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் அணிக்கு முக்கியமான வீரரா ?? இல்லையா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here