ரோஹித் சர்மா இடத்தை பிடிக்க இவரால் மட்டுமே முடியும் போல… !!! அதிரடி பேட்ஸ்மேன் தான் ப… !!!

கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டாலே, இந்திய அணிக்கான ரசிகர்கள் கூட்டம் எப்பொழுது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம் தான். அதிலும் ஐபிஎல் டி-20, சையத் முஸ்தாக் அலி மற்றும் விஜய் ஹசாரே போன்ற போட்டிகளில் விளையாடுவதை வைத்து இந்திய அணிக்கான வீரர்களை அவ்வப்போது தேர்வு செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர் தான் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். முதலில் சில போட்டிகளில் சொல்லும் அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. இருந்தாலும் தொடர்ந்த வாய்ப்பளித்தார் தோனி.

பின்னர் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டிகளில் சரியாக ரன்களை அடித்துள்ளார். பின்னர் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 மாஸ் ஆக அதிரடி வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் அதிக ரன்களை அடித்துள்ளார். அதில் ஒரு போட்டியில் இறுதி வரை பேட்டிங் செய்து ஆட்டம் இழக்காமல் 101* ரன்களை அடித்து தொம்சம் செய்தார்.

சமீபத்தில் விஜய் ஹசாரே போட்டியில் மத்திய பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின. அதில் களமிறங்கிய ருதுராஜ் சதம் அடித்துள்ளார். ஒரு சிறப்பான ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பதை தொடர்ந்து நிரூபித்து கொண்டே வருகிறார் என்பது தான் உண்மை.

அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர் தக்கவைப்பு பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் நடந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இடம்பெற்றும் அவருக்கு ப்ளேயிங் 11ல் இடம்பெறாதது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் ருதுராஜ் கெய்வாட் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துவிட்டார். ஆனால் அவருக்கு பதிலாக மூன்றாவது டி-20 போட்டியில் இஷான் கிஷான் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியதற்கு ரோஹித் சர்மா பாகுபாடு காட்டுகிறாரா ?? என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

ஆனால் இன்னும் சில போட்டிகளில் இதேபோல தொடர்ந்து அவரது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நிச்சியமாக ரோஹித் சர்மாவுக்கு பிறகு சிறந்த ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருப்பர் என்பதில் சந்தேகமில்லை. ருதுராஜ் கெய்வாட் பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க.. !!!