விராட்கோலி-யை இவங்க கொஞ்சம் கூட மதிக்கவில்லை ; இப்படியெல்லாம் பண்ணலாமா ?? கடுப்பான முன்னாள் வீரர் ;

இப்பொழுது இந்திய அணிக்கான கேப்டன் மாற்றியதில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது தான் உண்மை. கடந்த ஐசிசி உலகக்கோப்பை டி-20 2021 போட்டி முடிவுக்கு பிறகு நான் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக விராட்கோலி-யே அறிவித்தார்.

பின்னர் அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா டி-20 போட்டிகளுக்கான கேப்டனாக பதவியேற்றார். அதன்பிறகு இப்பொழுது தீடிரென்று ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக இருந்த விராட்கோலியை அதில் இருந்து வெளியேற்றி இப்பொழுது ரோஹித் சர்மாவை மீண்டும் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக நியமனம் செய்துள்ளது பிசிசிஐ.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். ஏனென்றால் விராட்கோலி கேப்டனாக ஏதும் செய்யவில்லை என்றாலும், அவர் செய்த சாதனைகளை மறந்துவிட்டதா ?? பிசிசிஐ என்று பல கேள்விகள் சமூகவலைத்தளங்களில் எழுந்து வருகிறது.

அதேபோல, இதனை பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கனேரியா அளித்த பேட்டியில்; விராட்கோலிக்காக பிசிசிஐ என்ன செய்தது ?? எனக்கு தெரிஞ்சு அப்படி ஏதும் இல்லை. இதுவரை விராட்கோலி தான் நான்காவது கேப்டன் 65 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிக ரன்களை அடித்த வீரரை கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியது சரியே இல்லை, விராட்கோலி இது வரை எந்த ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றவில்லை. ஆனால் அவர் செய்த சாதனைகளை பல, அவருக்கு மரியாதை உண்டு. கிரிக்கெட் உலகில் இரு சூப்பர்ஸ்டார்கள் உள்ளனர்.

அதில் விராட்கோலி மற்றும் பாபர் ஆசாம் போன்ற இருவர்கள் மட்டும் தான். விராட்கோலி-க்கு ஒரு தகவல் கூட பண்ணாமல் அவரை கேப்டன் பதவியில் இருந்து விலகியது சரியா ?? இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி போன்ற பெரிய ஆட்கள் இருக்கும்போது, விராட்கோலி-யிடம் ஒருவார்த்தை பேசியிருக்க வேண்டும்.

அதன்பிறகு ரோஹித் சர்மாவிடம் பேசியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கனேரியா. விராட்கோலி-யை கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றியது சரியா ?? தவறா ?? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!