நிச்சியமாக சென்னை அணியால் குஜராத் அணியை வெல்ல முடியாதா ?; குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள் ; காரணம் இதுதான் ;

ஐபிஎல் 2023 : ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்து ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் வென்று நான்கு அணிகள் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியின் விவரம் :

  1. குஜராத் டைட்டன்ஸ்
  2. சென்னை சூப்பர் கிங்ஸ்
  3. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்
  4. மும்பை இந்தியன்ஸ்

இதில் முதலில் இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு ஒரு தோல்வி வந்தாலும் இன்னொரு வாய்ப்பு இருக்கும். ஆமாம், குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டி முன்னேறிவிடும்.

அதே சமயம் தோல்வி பெறும் அணி , லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணிகளிடையே மோதும். அதில் வெற்றி பெறும் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

சென்னை அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் இருந்து பேட்டிங் வலுவாகவே இருக்கிறது. இருப்பினும் பவுலிங் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கிய நேரத்தில் பாத்திரன, ஆகாஷ் சிங், துஷார் பாண்டே, தீபக் சஹார் போன்ற வலுவான வீரர்களால் சென்னை அணிக்கு வெற்றி கிடைத்தது.

முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ? ஏனென்றால், கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டியில் அறிமுகம் ஆனது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த இரு ஆண்டுகளாகவே குஜராத் டைட்டன்ஸ் அணியை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

ஆமாம், இதுவரை மூன்று போட்டிகளில் (கடந்த ஆண்டு இரு போட்டிகள் மற்றும் இந்த ஆண்டு ஒரு போட்டி) குஜராத் மற்றும் சென்னை அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் குஜராத் டைட்டன்ஸ் அணி அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளனர். அதனால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்க உள்ள போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளனர். இதில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும் என்றதால் இரு அணிகளும் கடுமையான பயிற்சியில் உள்ளனர்.

இதில் எந்த அணி வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெறும் ? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!