ஐபிஎல் : ஐபிஎல் 2023 போட்டிகள் கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவுடன் லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் நாளை முதல் ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த ஆண்டு கோப்பையை எந்த அணி வெல்ல போகிறது என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.


ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் :
கடும் போட்டிகளுக்கு பிறகு நான்கு அணிகள் ப்ளே – ஆஃப் 2023-க்கு முன்னேறியுள்ளனர். அதில் குஜராத் அணி முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்திலும் உள்ளனர்.
போட்டியின் விவரம் :
நாளை நடைபெற உள்ள முதல் குவாலிபயர் ஆட்டத்தில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். இந்த போட்டி சென்னயில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.


அதனை அடுத்து புதன்கிழமை அதே சிதம்பரம் மைதானத்தில் குர்னல் பாண்டிய தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளதால் அனைத்து அணிகளும் கடுமையான பயிற்சியில் இருக்கின்றனர்.
சென்னை அணிக்கு ஆபத்தா ?
இந்த ஆண்டு ஐபிஎல் 2023 முதல் போட்டியி குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை அணியும் தான் மோதியது. அதில் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. அதுமட்டுமின்றி, இதுவரை மூன்று முறை இந்த இரு அணிகளும் மோதியுள்ளது. அதில் அனைத்து போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வென்றுள்ளது.
அதனால் நிச்சியமாக சென்னை அணிக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, சென்னை அணியின் கேப்டன் (மகேந்திர சிங் தோனி) மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் போட்டியின் போது கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


அதனால் ரவீந்திர ஜடேஜா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனிக்கு ஒரு பதிவு போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜடேஜா இனிவரும் போட்டிகளில் சென்னை அணியில் விளையாட வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது உண்மையிலும் இருவருக்கும் இடையே மோதல் தானா ? அல்லது வதந்தியா ? என்று ஜடேஜா அல்லது தோனி தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.
இந்த முறை குஜராத் அணியை வென்று இறுதி போட்டிக்கு முன்னேறுமா ? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ? நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி ஐந்தாவது முறை கோப்பையை வெல்லுமா ??
Dhoni Anna oru six adikallyaa