இதுவரை எந்த அணியையும் வழிநடத்தியது இல்லை ; ஆனால் ரவீந்திர ஜடேஜாவின் நோக்கம் இப்படி தான் இருக்கும் ; முன்னாள் சிஎஸ்கே வீரர் பேட்டி;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிகள் நாளை முதல் நடைபெற உள்ளது. இந்த முறை 2 புதிய அணிகளை கொண்டு மொத்தம் 10 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

ஆனால் ஐபிஎல் போட்டிகள் இன்னும் ஆரம்பிக்காத நிலையில் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் தோனி. இப்பொழுது தோனியை தொடர்ந்து ஆல் – ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தான் இனிமேல் சென்னை அணியை வழிநடத்த உள்ளார் என்று அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்தியாவில் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து இப்பொழுது வரை மகேந்திர சிங் தோனி தான் சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். அதிலும் இதுவரை 14 சீசன் போட்டிகளில் அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெருமை தோனியையே சாரும்.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி இனிவரும் சில ஆண்டுகள் நிச்சியமாக ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆதரவாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனி விலகியதற்கும் ஜடேஜா பொறுப்பேற்றதற்கும் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் இந்திய அணி மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரரான பத்ரிநாத் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; “ரவீந்திர ஜடேஜா ஒரு ப்ளேயாராக அருமையான ஆட்டத்தை விளையாடி வந்துள்ளார். அதுவும் இப்பொழுது கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அதனால் இனிவரும் போட்டிகளில் ஜடேஜாவின் இன்னொரு பக்கத்தையும் பார்க்க முடியும்.”

“ஆனால் இதுவரை ரவீந்திர ஜடேஜா ஒருமுறை கூட ஐபிஎல் அல்லது இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் இல்லை. அவரது பீல்டிங் பற்றி யாரும் பேச முடியாது. அதுமட்டுமின்றி அவர் பேட்டிங் , பவுலிங் மற்றும் இனிமேல் கேப்டன்ஷியும் செய்ய வேண்டிய சூழல் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த முறை நான்கு வேலைகளை செய்ய போகிறார் என்று கூறியுள்ளார் பத்ரிநாத்”.