தோனி கேப்டன் பத்தியில் விலகியதற்கு பிறகு விராட்கோலி செய்த பதிவு வைரலாக பரவி வருகிறது ;

0

ஐபிஎல் 2022 போட்டிகள் நாளை முதல் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர். இந்த ஆண்டு மெகா ஏலம் முடிந்ததில் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

இதற்கிடையில் சென்னை அணியின் கேப்டனாக இதுவரை வழிநடத்தி வந்த மகேந்திர சிங் தோனி நேற்று நான் கேப்டன் பதிவியில் இருந்து விலகுகிறேன் என்று அதிகார்வப்பூர்வமாக செய்திகளை வெளியிட்டார். இதனை பார்த்த சென்னை ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வருத்தம் எழுந்தது.

ஆமாம், ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் 2008ஆம் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார் மகேந்திர சிங் தோனி. இதுவரை மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளது சென்னை. 40 வயதான மகேந்திர சிங் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு பல வீரர்களை அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் ” தோனி என்றும் என்னுடைய மரியாதை இருந்து கொண்டே தான் இருக்கும். மஞ்சள் உடையில் புகழ்பெற்ற கேப்டனாக திகழ்ந்துள்ளார் மகேந்திர சிங் தோனி, இதனை கிரிக்கெட் ரசிகர்கள் எப்பொழுதும் மறக்கவே மாட்டார்கள்.” என்று பதிவு செய்துள்ளார் விராட்கோலி.

விராட்கோலி மற்றும் தோனி ஆகிய இருவருக்கும் இடையே நல்ல ஒரு நட்பு உள்ளது தான் உண்மை. எப்பொழுதும் ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு அல்லது போட்டி தொடங்கும் முன்பு பல விஷயங்களை பற்றி பேசுவது வழக்கம் தான். அதுமட்டுமின்றி இந்திய அணியின்க்கப்தான் பதிவியில் விலகிய தோனி, அதனை விராட்கோலி-யிடம் தான் ஒப்படைத்தார்.

பின்னர் ஒரு ப்ளேயராக விளையாடி விராட்கோலி-க்கு ஆதரவாக விளையாடி வந்தார் தோனி. இருப்பினும் தோனிக்கு மட்டும் இந்த நிலைமை இல்லை. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்த நிலை உண்டு என்பது மாற்றுக்கருத்தில்லை. தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை பற்றி உங்கள் கருத்து என்ன ? COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here