CSK அணியின் பட்டைய கிளப்ப போகும் அதிரடியான புதிய ப்ளேயிங் 11 இதுதான் ; முழு விவரம் இதோ ;

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பது கொண்டு இருந்த ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதுவரை வெற்றிகரமாக 6 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இன்று 7வது போட்டியில் ரவீந்தர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்த போட்டி இன்று பரபோர்னே மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளனர். இருப்பினும் முதல் போட்டியில் சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் தான் காரணம்.

ஆமாம், சென்னை அணிக்கு தொடக்கத்தில் ஆட்டம் சரியாக அமையவில்லை, தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் 20 ஓவரில் 131 ரன்களை மட்டுமே அடித்தனர். அதேபோல தான் பவுலிங் -கில் சரியான வீரர் யாரும் இல்லாத காரணத்தால் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

ஆமாம், சென்னை அணியின் முன்னணி பந்து வீச்சாளரான தீபக் சஹார் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. மீதமுள்ள பவுலர்களில் ப்ராவோ மட்டுமே சிறப்பாக பவுலிங் செய்தார். சுழல் பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பிறகு திறமையான வீரர் யாருமில்லை என்ற நிலை எழுந்தது.

அதனால் இன்றைய 7வது போட்டியில் நிச்சியமாக ப்ளேயிங் 11ல் ஒரு சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. அதிலும் குறிப்பாக ஆல் – ரவுண்டர் தான். இந்த முறை மொயின் அலி நிச்சியமாக ப்ளேயிங் 11ல் இருக்க போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து அவர் இந்தியாவுக்கு வர விசா பிரச்சனை இருந்ததாவும் அதனால் இவரால் இந்தியாவுக்கு சரியான நேரத்தில் வந்தடைய முடியாமல் போனது. ஆனால் சரியாக முதல் போட்டி நடக்கும் பொது மொயின் அலி அணியில் இணைந்து விட்டதாக தகவகள் வெளியாகியுள்ளது.

மிச்சேல் சண்ட்னர் -க்கு பதிலாக மொயின் அலி இடம்பெற்றால் சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங்-கை எதிர்பார்க்கலாம். ஆமாம், அடுத்தது சிவம் துபே, இந்த ஆண்டு ஏலத்தில் சென்னை அணி 4 கோடி விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது. ஆனால் அதில் எந்த பயனும் இல்லை.

ஆமாம், தொடக்க ஆட்டத்தில் பேட்டிங் செய்த ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதுமட்டுமின்றி, 1 ஓவர் மட்டுமே பவுலிங் செய்து அதிலும் அதிகபட்சமாக 11 ரன்களை கொடுத்துள்ளார் ஷிவம். அதனால் அவருக்கு பதிலாக இளம் வீரரான ராஜ்வரதன் ஹங்காரகேகர் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.